உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போராட்டத்தை அனுமதிக்க கூடாது: போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போராட்டத்தை அனுமதிக்க கூடாது: போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: 'பொது அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த ஒரு போராட்டத்திற்கும், காவல் துறை அனுமதி வழங்கக்கூடாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், வேல் ஏந்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், வரும் 18ல் சென்னை தங்க சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, பாரத் ஹிந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிறப்பித்த உத்தரவு:அரசியலமைப்பு என்பது பேச்சு, கருத்து சுதந்திரத்தை உள்ளடக்கியது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், அதை தவறாக பயன்படுத்தக் கூடாது.மதுரையில் நடந்த போராட்டத்தின் போது, கலவரத்தை துாண்டும் வகையில் செயல்பட்டதற்காக, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இரு பிரிவினர் இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., முன் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தை, மதுரை கலெக்டரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.எனவே, திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவத்தை கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை.அப்படி நடத்தினால், அது மற்ற மதத்தினரை மீண்டும் துாண்டச் செய்து, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும்,காவல்துறை அனுமதிவழங்கக்கூடாது. மத ரீதியிலான பதற்றங்களை தணிக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை ஹிந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வந்துள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம்.எனவே, அனைத்து மத, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை, அரசு பேண வேண்டும். மத நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில், எவரையும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இருப்பினும், மனுதாரரும், மற்ற பக்தர்களும், சென்னை ராசப்பா தெருவில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலில் கடவுளை வழிபடலாம். அவர்கள் வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யஉள்ளதாக, பாரத் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Karthik
பிப் 16, 2025 15:40

இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே


jayvee
பிப் 16, 2025 09:48

நீதித்துறையும் இப்படி நடந்துகொள்வது வேடிக்கையாக உள்ளது .. கருத்து சுதந்திரம் கருத்துரிமை மத உரிமை இதெல்லாம் திமுகவுக்கு அவர்களை ஆதரிக்கும் சிலுவைக்கும் பச்சைக்கும் மட்டுமே உள்ளது என்று அவர்களும் நினைக்கும் நிலையில் உள்ளது தமிழகம்


Bhaskaran
பிப் 15, 2025 23:03

நீதிபதி மலையில் மாமிசம் சாப்பிட்டவங்களை கண்டிக்கவேண்டாமா .ஒர்க்கண்ணில் வெண்ணை ஒருக்கண்ணில் சுண்ணாம்பு .நீதி அருமையாக நிலைநாட்டப்படுகிறது போலும்


raja
பிப் 15, 2025 17:57

சிறுபான்மையினர் கொலை குற்றம் கூட செய்யலாம் ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்கள் அவர்களின் உரிமைக்காக போராடக்கூட உரிமை இல்லை. அப்போ என்னடா செக்குலரிஸம்? இதுக்கு ஒரு கோர்ட். அதற்கு ஒரு நீதிபதி. லெபனானில் பெரும்பான்மையினத்தவர் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டனர். இன்று அந்த நாடு போர்களால் சின்னாபின்னமாகிவிட்டது. ஒரு சிலரை தவிர பெரும்பான்மை மக்கள் மூர்க்க மத வெறியர்கள்களாகவே இருக்கின்றனர்... இதனால்தான் நாடு நாடாக இருக்க முடிவதில்லை...


Srameshsrivi
பிப் 15, 2025 15:31

கணம் நீதிபதி அவர்களே... அதே திருப்பரங்குன்றம் மலையில் , ஆட்டு பிரியாணி சாப்பிட்டும், இந்துகளுக்கு விரோதமாக, செயல்பட்டு மனம் புண்படச்செய்த அந்த எம். எல். ஏ. வை நீங்கள் கண்டிக்க வில்லையே ? அது ஏன் ?


Murugesan
பிப் 15, 2025 15:31

கோயில் சொத்தை திருடி தின்கிற அரசாங்க அயோக்கியர்கள்


Anand
பிப் 15, 2025 14:35

இந்த கட்டுப்பாடு உத்தரவு வெங்காயம் எல்லாம் ஹிந்துக்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே...


Barakat Ali
பிப் 15, 2025 14:11

ஒரு எதிர்ப்புப் போராட்டம் எப்படி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் ????


A1Suresh
பிப் 15, 2025 13:13

முகலாய மன்னர் பாபருக்கு முதலில் கல்லறை ஆக்ராவில் அமைந்தது. பிறகு அவர் பிறந்த ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் அவரே அமைத்த தோட்டத்திற்கு இடம்பெயரப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றின் மீதான கல்லறைகளை இடம்பெயருங்கள்


A1Suresh
பிப் 15, 2025 13:12

ஆகம முறைப்படி இடத்தினை தேர்வு செய்து, சுத்தி பரிஹாரங்கள் செய்து கோயில் கட்டினால் அதே மலையில் வந்து கல்லறை கட்டுவது என்ன வகை நியாயம் ? முடி, நகம், எலும்பு, ரத்தம், மாமிசம் கோயிலிடத்தில் வரக் கூடாது. திருப்பரங்குன்றம் மலையே தேவஸ்தானத்திற்கு சொந்தம் தான். எனவே கல்லறைகளை இடம்பெயர்த்தலே நிரந்தரமான நன்மை தரும்


முக்கிய வீடியோ