| ADDED : ஜூன் 09, 2024 02:55 AM
திருப்பூர்: 'ஹிந்து சமய அறநிலையத் துறையில், கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாணவர் இல்லங்களை மூடும் அரசின் முடிவு, மறைமுகமான, மதம் மாற்று வழி' என, ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும், 33 ஆதரவற்ற மாணவர் இல்லங்களை இழுத்து மூடும் வகையில், தி.மு.க., அரசு செயல்படுகிறது. கொரோனா காலத்தில் மூடிய இந்த இல்லங்களை நிரந்தரமாக மூடும் வகையில், அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.கோவில்கள் என்பது அறநிலையங்களாக என்றும் இருந்து வந்துள்ளன. ஏராள மான வருவாய், சொத்து இருந்தும் அரசின் பிடியில் கோவில்கள் இன்று சிறப்புகளை இழந்து வருகின்றன.அவ்வகையில் தான் தற்போது, 30 கோவில்கள் நடத் தும் 33 மாணவர் இல்லங்களை மூடும் அரசின் திட்டம் உள்ளது. இவற்றில் மாணவர் சேர்க்கை தற்போது மறுக்கப்படுகிறது. அடுத்து, சமூக நலத்துறை நடத்தும் இல்லங்களும் மூடுவிழா காணப்படும். இவற்றின் நிதி வேறு இனங்களுக்கு திருப்பி விடப்படும்.இதனால், மாற்று மத நிர்வாகங்களின் கீழ் உள்ள மாணவர் இல்லங்களுக்கு இம்மாணவர்களை கொண்டு சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது. இது ஒரு மறைமுகமான மதமாற்று வழி என, எண்ண தோன்றுகிறது.மாணவர்கள் இல்லம் என்ற நடைமுறை தொடர்ந்து செயல்பட வேண்டும். அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.