உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதாரண மக்களை எப்படி பாதுகாக்கும்?

சாதாரண மக்களை எப்படி பாதுகாக்கும்?

'தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் புகார் தந்தும், அவரின் உயிரை காப்பாற்ற வக்கில்லாத தமிழக அரசு, சாதாரண மக்களை எப்படி பாதுகாக்கும்' என, மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த இரு தினங்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.போலி திராவிட மாடல் ஆட்சியின் அவலங்களுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி, தங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் இரையாகி வருவது தொடர் கதையாகியுள்ளது. தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் புகார் தந்தும், அவரின் உயிரை காப்பாற்ற வக்கில்லாத தமிழக அரசு, சாதாரண பொது மக்களை எப்படி பாதுகாக்கும்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை