மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
3 hour(s) ago | 17
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
4 hour(s) ago | 2
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
5 hour(s) ago | 6
புதுக்கோட்டை,:தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்வதற்கு, அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்ந்து எடுத்துரைக்க முதல்வர் குழு ஒன்று அமைத்துள்ளார். அந்த குழு கொடுக்கும் அறிக்கை அடிப்படையில், தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஒரு நபர் ஆணையம் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் சில திருத்தங்களை செய்து, தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவோம்.லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது. இனி, அ.தி.மு.க., ஆபத்தான சூழலை சந்திக்கும். என கூறியிருந்தேன். அது தற்போது நடந்து கொண்டுள்ளது. கொங்கு மண்டலத்தை சார்ந்த கட்சொ நிர்வாகிகளே, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அதேபோன்று டெல்டா மாவட்ட நிர்வாகிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இனி, அ.தி.மு.க.,வில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்திருக்கும் அக்கட்சியினர் தி.மு.க.,வுக்கு வர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்களை அரவணைக்கத் தயாராக உள்ளார். அ.தி.மு.க.,வினரும் தி.மு.க.,வில் இணைந்தால், கட்சி இரு மடங்கு வலிமை பெறும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகி உள்ளார். அவர் எங்கு சென்றாலும், போலீசார் கைது செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 17
4 hour(s) ago | 2
5 hour(s) ago | 6