உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று பெண் போலீஸ் தற்கொலை: அறிக்கை தர ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவு

மூன்று பெண் போலீஸ் தற்கொலை: அறிக்கை தர ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருமணமான மூன்று பெண் போலீசார், அடுத்தடுத்து தற்கொலை செய்த விவகாரம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, ஐ.ஜி.,க்களுக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பெண் போலீஸ் புவனேஸ்வரி, 25. இவர், திருமணமான ஓராண்டில் தற்கொலை செய்தார். சென்னை ராயபுரம் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் பிரியங்கா, 27, அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் சேகர், 30, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். நான்கு மாதங்களில் தற்கொலை செய்தார். கோவையில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த அஞ்சலி, 29, என்பவரும் தற்கொலை செய்தார்.மே மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து, திருமணமான மூன்று பெண் போலீசார் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு கணவருடன் கருத்து வேறுபாடு, குழந்தையின்மை என, பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய நிலையில் காவல் துறை உள்ளது. பெண் போலீசார் தற்கொலை குறித்து, 'ஆன்லைன்' வீடியோ அழைப்பு வாயிலாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவு:பணிச்சுமை, மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தில் இருக்கும் பெண் போலீசாருக்கு, மகிழ்ச்சி திட்டம் வாயிலாக, 'கவுன்சிலிங்' தரப்பட்டதா; அவர்களுக்கான பிரச்னைகள் குறித்து தெரிவிக்க குறை கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதா; அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
ஜூன் 04, 2024 12:49

போலீஸ் துறை மாநில பட்டியலில் இருந்து மத்திய உள்துறைக்கு மாற்றம் செய்யப்படவேண்டும் ...சரிபாதி போலீசார் 50 சதம் அந்தந்த மாநிலத்தில் இருந்தும், மீதம் மற்ற மாநிலங்களிலிருந்து பரவலாகவும் நியமனம் செய்யப்பட்டால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் ..அரசியல் அழுத்த்தம் இருக்க வாய்ப்பு இல்லை . ஓரளவு நேர்மையும் இருக்கும் ..மாநில அரசியல்வாதிகளின் அட்டகாசம் கட்டுக்குள் இருக்கும்


S. Gopalakrishnan
ஜூன் 04, 2024 09:43

அவர்களுக்கு பல்வலி தாங்க முடியவில்லையாம். தகுந்த போலீஸாரைக் கொண்டு பல் வைத்தியம் செய்து காப்பாற்ற உயரதிகாரிகள் முயற்சி செய்திருக்கலாம்.


N Sasikumar Yadhav
ஜூன் 04, 2024 06:47

முதலில் அரசியல் அழுத்தத்திலிருந்து காவல்துறை வெளிவரவேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 04, 2024 05:22

ஞாயமான முறையில் விசாரணை நடத்தாமல் வெறும் ரிப்போர்ட் என்றால் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. பெயர் தெரியாத அளவில் பெண்போலீசை வைத்து சவுக்கரை நக்கல் செய்வது போல அழைத்து வந்து காமடி செய்ததெல்லாம் பொது மக்களுக்கு மறந்திருக்காது.


raman
ஜூன் 04, 2024 04:29

திருமணமான ஏழு வருடங்களுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால், விசாரணை செய்யவேண்டும் என்பது விதி. இதில் பெண் போலீஸும் அடங்கும். ஆனால் இவர்களுக்கு மட்டும் தீவிர விசாரணை வேண்டும். அப்போ மற்ற பெண்கள் பற்றிய விசாரணை பேருக்குத்தானா


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி