உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தியை திணித்தால் நடப்பதே வேறு: பிரசாரத்தில் கமல் திடீர் ஆவேசம்

ஹிந்தியை திணித்தால் நடப்பதே வேறு: பிரசாரத்தில் கமல் திடீர் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஹிந்தி மொழி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நாங்களே படித்துக்கொள்வோம். திணித்தால் நடப்பதே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து, கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது: விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர். விஞ்ஞானத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல், விவசாயிகளை விரட்ட பயன்படுத்தும் நிலை தற்போது உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது ஹிந்திக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் தொடர்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி உள்ளது. ஹிந்தி மொழி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நாங்களே படித்துக்கொள்வோம். திணித்தால் நடப்பதே வேறு. பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. குழந்தைகளை படிக்க வைக்க காலை உணவுத் திட்டத்தை வழங்கும் அரசு தேவையா? அல்லது படிக்கும் குழந்தைகளை நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அவர்களின் கல்வியைப் பறிக்கும் அரசு தேவையா என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Easu
ஏப் 06, 2024 15:26

அப்புறம் என்ன ,..... இந்தி படத்தில் நடித்தீர்கள்


kumarkv
ஏப் 05, 2024 22:32

நடப்பதே வேறு அப்புறம் இந்த வயதில் இந்தி படிக்க ஆரம்பித்து விடுவேன்


NicoleThomson
ஏப் 05, 2024 21:10

மா கி துவா என்று எழுதியிருக்கும் ஆட்டோக்களில் பயணம் seiveergalaa?


sankaran
ஏப் 05, 2024 10:23

ஆனா இவர் மட்டும் சோனி டிவில ஹிந்தில பேசுவார், நம்ம மட்டும் பேச கூடாது என்ன நியாயம்.


Mohan das GANDHI
ஏப் 04, 2024 17:08

திமுகக்காரன் கமல்ஹாசன் எதற்கும்...


Sainathan Veeraraghavan
ஏப் 04, 2024 10:52

இவர் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுப்பதை பற்றி ஒன்றுமே பேசாதவர்


vidhu
ஏப் 03, 2024 15:55

ஏக்துஜேக்கிலியே நடிச்சு கைதட்டல் வாங்கும்போது எப்படி ஆண்டவரே இருந்தது சொம்புத்தூக்கி


S.Bala
ஏப் 03, 2024 15:12

ஹிந்தி படத்துல நடிச்சி பணம் சம்பாதிப்பீங்க ஆனால் நாங்க ஹிந்தி படிச்சி வேளைக்கு போக கூடதா? என்னய்யா உங்க மாடல்


Sampathkumar Sampath
ஏப் 03, 2024 12:33

நாம என்னமோ நெனைச்சோம் ஒரு பப்பும் வேகல பொழப்பு நடத்த பணம் வேணும் வேற என்ன பண்றது நல்ல நடிகர்


kumar
ஏப் 03, 2024 07:58

இந்தியை யாரும் திணிக்கவில்லை ஆனால் நீங்கள் கூஜா தூக்கும் போதை கட்சியின் தலைவர் கட்டுமரத்தினால் தொடங்கப்பட்டு அவரது பேரன் உதவா நிதி வரையில் அவர்களுக்கு எப்போது அரசியல் தொந்தரவு வந்தாலும் கையில் எடுக்கும் இந்த இந்தி எதிர்ப்பு திணிப்பினால் தான் அறுபது வருடங்களாக தமிழக மக்கள் துன்புறுத்த படுகிறார்கள்


மேலும் செய்திகள்