உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கையை விதைப்பதா? யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை; ராமதாஸ் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கையை விதைப்பதா? யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை; ராமதாஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார்.

தாராளம்

அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகளில், மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது.அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வழக்கமாக பள்ளிக்கு ஆண்டு விழா நடத்துவதற்கே சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான் செலவிடப்படும். ஆனால், மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளது.

யார்

தம்மை மகாவிஷ்ணு என்று கூறிக்கொண்ட அந்த நபருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரியத்தைக் கொடுத்தவர்கள் யார்?

இனியும் கூடாது

அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள் என்று பா.ம.க., பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்யாத பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிகழ்ச்சிகள் இனியும் நடப்பதை அனுமதிக்கக்கூடாது.

தேவை

சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த சிக்கலை மூடி மறைத்து விடக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Palanisamy T
செப் 08, 2024 02:50

ராமதாஸ் அவர்களே முதலில் நீங்கள் சாதிவெறிப் போராட்டங்களை இனிமேல் நடத்த வேண்டாம். அதைப் பற்றிய சிந்தனையும் வேண்டாம். சாதி மக்களை பிரித்து விடும். காலவோட்டத்தில் தமிழினத்தை அழித்துவிடும். நல்ல தமிழராக வாழ்ந்துக் காட்டுங்கள். நல்ல கல்வியின் மூலம் மூடநம்பிக்கைகளை குறைத்து விடலாம். பள்ளியில் ஆன்மீகம் போதிக்கப்படுவதில் எந்த தவறு களுமில்லை. அதைச் சொல்லுபவர்களின் அணுகுமுறையில் உள்ளது. திருக்குறள் ஆன்மிகம் நூலென்பதை மறந்து விடவேண்டாம். அதையும் பள்ளியில் போதிக்கக் கூடாதென்றுச் சொல்ல முடியுமா?திருமுறை நூல்களென்றால் அது இறைவழிப்பாட்டு நூல்கள். அதை யெல்லாம் பள்ளியில் பேசக் கூடாதென்று சொல்லுகிண்றீர்களா? எங்கே தைரிய. மிருந்தால் மக்களிடம் உரக்க வெளிப் படையாக சொல்லமுடியுமா? பள்ளியில் மதப் போதனைகள் கூடாது. ஆனால் ஆன்மிகம் பற்றி பேசுவதை தடுக்க எவனுக்கும் உரிமையில்ல்லை. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றார்கள். அதில் அரசியல் ஆதாயம் தேடு கின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உடனே நிறுத்திக் கொள்ளவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 07, 2024 21:30

மரம் வெட்டி ராமடோஸ்க்கு பள்ளிகளில் குத்தாட்டம், கிருத்துவ மத போதனைகள் செய்தல் பரவாயில்லை. இப்போது மட்டும் பேச வந்துவிட்டார். ஹிந்துக்களே, விழித்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அடுத்த தலைமுறை உங்களை கேவலமாக திட்டும்.


C.SRIRAM
செப் 07, 2024 16:54

அரசியலில் இருப்பை காட்டி கொள்ள என்ன முயற்சி எடுத்தாலும் அது எடுபடாது


இராம தாசன்
செப் 07, 2024 00:13

ராமதாஸ் அவர்களே - லயோலா கலோரி ஆசிரியர் கல்வி பாடத்தில் கிறிஸ்துவர்கள் பாடத்தை புகுத்தியுள்ளேன் என்று பெருமையாக பேசியபோது தூங்கி கொண்டு இருந்தீர்களா? தஞ்சை மனைவி தற்கொலை ?? செய்து கொண்டதாக சொன்னபோது எங்கே சென்றீர்கள்


Sathyanarayanan Sathyasekaren
செப் 06, 2024 19:11

அவர் பேசியது இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது, அவர் யார் என்று கூட பல ஹிந்துக்களுக்கு தெரியாது, அவர் பேசிய உண்மைகளை தூங்கிக்கொண்டு இருக்கும் ஹிந்துக்களுக்கு தெரியப்படுத்தியர்க்கு இந்த அந்நியர்கள் திருட்டு திராவிட கும்பலுக்கு நன்றிகள்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 06, 2024 18:52

வேறு ஏதோ ஊழல் கொள்ளை விஷயத்தை மறைக்க மடை மாற்றும் வேலை நடக்க ஆரம்பித்து விட்டது. திருட்டு திராவிட வழக்கம் அதுதானே.


Bhaskaran
செப் 06, 2024 18:45

சின்ன அய்யா திரூச்செந்தூர் துலாபாரம் கொடுத்திருக்கார்


Dharmavaan
செப் 06, 2024 15:23

மடையங்களுக்கு மூட நம்பிக்கை எது என்று தெரியவில்லை உளறுகிறான்


ulaganathan murugesan
செப் 06, 2024 15:04

. ஒருத்தன் வந்து போன பிறவில பாவம் பண்ணவங்க... இந்த பிறவியில அழகா இருக்க மாட்டாங்க... ஊனமுற்றவர்களாக இருப்பாங்க.... ஒருத்தன் வநது சொன்னா அதை பாராட்டனுமா... அது யாரா இருந்தா என்ன?


Nagarajan D
செப் 06, 2024 13:45

ஏண்டா மரம் வெட்டி.... நீயே உனக்கு பேசுவது கேவலமென்று தெரியவில்லையா? எது மூடநம்பிக்கை? உன் பொண்டாட்டி நெற்றியிலிருக்கும் பொட்டு கூட மூடநம்பிக்கை தான் என்று சொல்லுவியா? பாவம் செய்யவேண்டாம் என்று தானே அந்த பேச்சாளர் சொன்னார்... உடனே உன்னை போன்ற அய்யோக்கிய அரசியல் வியாதிகளுக்கு என்னடா ஹிந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கை மட்டும் கண்ணை உறுத்துதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை