உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றியின் முகட்டில் நிற்கும் இண்டியா கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

வெற்றியின் முகட்டில் நிற்கும் இண்டியா கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ., வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணி திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

புதிய விடியல்

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ., உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான துவக்கமாக அமையும். இது தொடர்பாக இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ., வீழட்டும்! இண்டியா கூட்டணி வெல்லட்டும்!. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Kuppan
ஜூன் 03, 2024 17:46

இந்த முறை தமிழகத்தில் அதிக இடத்தில செய்த திமுக வுக்கு டெல்லியில் நிச்சயம் இடம் உண்டு...


vidhu
ஜூன் 03, 2024 16:08

அப்படியாவது ஆறுதல் அடையட்டும்.


Kuppan
ஜூன் 03, 2024 14:53

நாளைக்கு அதாவது ஜூன் 4ம் தேதி மீண்டும் இந்த அறிக்கையை படித்து பார்க்க வேண்டுகிறேன், ஒரு மாநிலத்தின் முதல்வரின் அறிக்கைக்கும் மக்களின் முடிவிற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், தமிழக மக்கள் எப்படி பட்ட நபரை முதல்வராக தேர்ந்து எடுத்து உள்ளார்கள் என்று தங்களை தாங்களே அடித்து கொள்ள வேண்டும்.


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூன் 03, 2024 12:08

எது பாசிசம் என்பதை பற்றிய புரிந்துணர்வு ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மாநில அரசுகளை தகுந்த காரணம் இன்றி இரவோடு இரவாக மத்திய அரசு கலைப்பது பாசிசம். மக்களின் கருத்து சுதந்திரத்தை அரசியல் சுயநலத்துக்காக முடக்கி மக்களை அடக்கி ஆள்வது பாசிசம். தேர்ந்தெடுக்கப்பட்ட காலக்கெடுவை மீறி ஆட்சி செய்வது பாசிசம். இவை எல்லாம் செய்தது மத்தியில் அரசாண்ட காங்கிரஸ்.


Ramesh Sundram
ஜூன் 03, 2024 11:02

நீங்கள் துணை பிரதமர் இங்கே உதயநிதி தமிழகத்தின் முதல் அமைச்சர் சகோதரி கனிமொழி ரயில்வே அமைச்சர் டபுள் watch டூக்ளோஸ் நாட்டின் நிதி அமைச்சர் இன்பநிதி விளையாட்டு துறை அமைச்சர்


V GOPALAN
ஜூன் 03, 2024 10:07

Stalin is in drowsy stage for the last two years.


R KUMAR
ஜூன் 02, 2024 21:46

கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று கனவு கண்டு உளறுவதற்கும் உரிமை உள்ளது. நின்றுகொண்டு கனவு கண்டால் பாதாளத்தில் விழவும் நேரிடும் . ஜாக்கிரதை.


A1Suresh
ஜூன் 02, 2024 10:17

இதோ புள்ளி வைத்த கூட்டணி கட்சியினர் முகட்டில் இருந்து அதலபாதாளத்திற்கு தலைகுப்புற விழுகிறார்களே


நிக்கோல்தாம்சன்
ஜூன் 02, 2024 09:01

இந்த விடியலுக்கு டாஸ்மாக் விடியல் ன்ற பெயர் வைக்கலாமா ஸ்டாலின் சார்


மோகனசுந்தரம்
ஜூன் 02, 2024 06:13

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு.


மேலும் செய்திகள்