மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
சென்னை:தமிழகத்தில், சென்னை புழல் உட்பட, 142 சிறைகள் உள்ளன. அவற்றில், 21,000த்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், மொபைல் போன் பயன்பாடு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உளவுத்துறை போலீசார், தகவல்களை திரட்டி உள்ளனர். அதன் அடிப்படையில், புழல் உட்பட, 105 சிறைகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிறை காவலர்கள் கூறுகையில், 'சமீபத்தில், புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி, துாத்துக்குடி, கோவை உள்ளிட்ட சிறைகளில் கைதிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ரவுடிகள் என்பதால், உளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது' என்றனர்.
2 hour(s) ago
3 hour(s) ago