உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்; திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி

இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்; திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பிடிபட்ட வழக்கை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டரை டிஸ்மிஸ் செய்து, திருச்சி டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.திருச்சி மாவட்டம், கானக்கிளியநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியசாமி, 56. இவர், இதற்கு முன் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.கடந்த 2022ல் நாகை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பெரியசாமி பணியாற்றியபோது, அங்கிருந்து இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த, 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கை பெரியசாமி முறையாக விசாரிக்கவில்லை. கஞ்சா வழக்கு குறித்து போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை, வழக்கின் குற்றவாளிகளுடன் விடுதியில் விருந்தில் பங்கேற்றுள்ளார்.குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, அடுத்தடுத்த குற்றச்சாட்டு எழுந்தது.இவர், பணியில் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி 13 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பிரச்னையில் சிக்கி வரும் இவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajasekar
மார் 17, 2025 16:00

இவர் பணியாற்றிய இடங்களில் இவரால் பாதிக்கப்பட்டோர் அப்பாவி மக்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை


அனாதை
மார் 12, 2025 20:47

சாதாரண ஆப்சென்ட் க்கு என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.. உங்கள் துறையில் முதல்வர் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை...கொலை பண்ணுனவன் கஞ்சா கேஸ்ல மாட்டுனவன் கற்பழிப்பு கேஸ்ல மாட்டுனவன்லாம் மீண்டும் பணிக்கு சேர்ந்துட்டான்..எனக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை..வழக்கு தொடுக்க என்னிடம் பணமும் இல்லை..காவல் பயிற்சி பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றேன்.. தற்போது வாட்ச்மேன் வேலைக்கு சென்று கொண்டுள்ளேன்


anonymous
மார் 12, 2025 17:52

இவர் தீமூகா வில் இணைய சகல தகுதிகளும் உள்ளன.


Venkateswaran Rajaram
மார் 12, 2025 11:32

13 முறை மாட்டி இருக்காராம் ...ரிட்டையர் ஆகும்போது டிஸ்மிஸ் என்ன நாடகம் இது ..மக்களை முட்டாள்னு பச்சை குத்திட்டிங்க ...இவர்கள் கொள்ளை அடிக்கும் தொழில் செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்


Kumaravelan
மார் 12, 2025 20:48

டிஸ்மிஸ் என்றால் எந்தப் பலனும் கிடையாது.. ஓய்வூதியம் கிடைக்காது...


S.V.Srinivasan
மார் 12, 2025 09:37

மீன்தான் மாட்டியிருக்கு. திமிங்கலமெலாம் எப்ப புடிக்க போறீங்க ஆஃபீஸ்ர்ஸ்? கிண்று வெட்ட போய் பூதம் கிளம்பின கதை ஆய்டும்.


अप्पावी
மார் 12, 2025 08:52

உட்டுருவோமா? நாளைக்கே முன்சீஃப் கோர்ட்டில்ருந்து தடை வாங்க உச்சநீதிமன்றம் வரை போய் ஜெயிச்சு பதவி உயர்வு பெற்று டி.ஐ.ஜி லெவலுக்கு போறேனா இல்லையா பார். திருட்டு திராவிடனா கொக்கா?


Dharmavaan
மார் 12, 2025 07:37

எல்லா அரசு அதிகாரிக்கு தவறு செய்தால் இந்த தண்டனை கொடுக்க வேண்டும்


rama adhavan
மார் 12, 2025 07:28

அம்மாடி, ஒரு கருப்பு ஆடு கசாப்பு செய்யப்பட்டது. சந்தோஷம். மிச்சம் உள்ள ஆயிரக்கணக்கான கருப்பு ஆடுகளயும் கசாப்பு செய்வது எப்போது? வாழ்க வருண் குமார்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 12, 2025 06:58

நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு மிக்க நன்றி.


balakrishnankalpana
மார் 12, 2025 06:47

மிக காலதாமதமான முடிவு


முக்கிய வீடியோ