உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிரட்டல், மன்னிப்பு; அநாகரிகத்தின் உச்சம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

மிரட்டல், மன்னிப்பு; அநாகரிகத்தின் உச்சம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகார தோரணையில் மிரட்டுவதும், மன்னிப்பு கேட்க வைப்பதும் அதை பொது வெளியில் வெளியிடுவதும் கண்டிக்கத்தக்கது,'' என, செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:கோவையில் நடந்த ஜி.எஸ்.டி., குறைதீர்க்கும் நாளில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், கேள்வி கேட்டதற்காக தன்னுடைய அறைக்கு அழைத்து, அவரை மன்னிப்பு கேட்க வைத்ததும் கண்டிக்கத்தக்கது. கோவை, பண்புள்ள மண், இங்கு ஒரு அநாகரிக செயல் நடந்திருப்பதை கண்டிக்கிறோம்.கோவையில் நடந்த நிகழ்வுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்பதில் என்ன பயன்? பெண்களை நாம் தாயாக பார்க்கிறவர்கள், ஒரு ஆம்பளையை வரவழைத்து,மன்னிப்பு கேட்க வைத்து, படம் எடுத்து போடுவார்களா, நம் சகோதரிகள் செய்வார்களா? அநாகரிகத்தின் உச்சம் இது. அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் இதுவரை 8000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள். ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. பிற கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. இந்த கூட்டணி ஒரு மகா சமுத்திரம், அவ்வப்போது அலை அடிக்கும், ஆனால் அமைதியாகிவிடும். அசைக்க முடியாத இரும்பு கோட்டை போன்ற வலிமையான கூட்டணி; அசைக்க முடியாது; இந்த கூட்டணி தொடரும். இவ்வாறு, கோவையில் செல்வப் பெருந்தகை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 16, 2024 10:09

எந்த ஹோட்டல் கடைக்காரன் பில் கொடுத்து மக்களிடம் வசூலித்த ஜிஎஸ்டி வரியை ஒழுங்காக அரசுக்கு செலுத்தியுள்ளார்கள். நாள் முழுவதும் வசூலான ஜிஎஸ்டி பில்களை பின்புறம் உள்ள உங்கள் கம்ப்யூட்டரில் பாதிக்கு பாதியாக வெட்டி பாதி ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்துகிறார்கள். மீதி பாதி பில்களில் வசூலான ஜிஎஸ்டி தொகையை ஆட்டையை போட்டு மக்களையும் அரசாங்கத்தையும் ஏய்த்து தானே பிழைப்பு நடத்துகிறார்கள். இது சரியா.


தத்வமசி
செப் 15, 2024 21:58

உங்க ஆட்சி சமயத்துல மேல் தளத்தில் ரெய்டு, கீழ் தளத்தில் பேச்சுவார்த்தை நடந்ததே. அது என்ன சினிமா படம் சார் ?


vijai
செப் 15, 2024 13:16

வாய மூடு


p.s.mahadevan
செப் 15, 2024 11:33

அடேய் நாட்டிற்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ....ஏண்டா இப்படி வேண்டாத கலகம் பாண்ணுறீங்க


Dharmavaan
செப் 15, 2024 09:23

பத்து ஆட்சி மாறிய பச்சோந்தி திருடன் /குற்றவாளி தத்துவ ஞானி போல் பேசுகிறான். இது 125 வருட காங்கிரஸின் கேவலம் .மத்திய அமைச்சரிடம் கிண்டலும் கேலியாக பேசிய கொள்ளைக்கார ஓட்டல் திருடன் தண்டிக்கப்பட வேண்டியவன்


Shekar
செப் 15, 2024 09:21

நல்லவேளை அந்த ஆள் மத்திய அமைச்சரிடம் விவாதம் செய்துள்ளார், இதேபோல் விடியல் அமைச்சர்களிடமோ, காங்கிரஸ் ஆட்சியிலோ கேட்டிருந்தால், அவர் கதி?


Shekar
செப் 15, 2024 09:18

சாத்தான் வேதம் ஓதுகிறது,


நிக்கோல்தாம்சன்
செப் 15, 2024 09:17

கலக்கிடீங்க லண்டன் தொழிலதிபர்


Sundar R
செப் 15, 2024 07:01

செல்வப் பெருந்தகையின் பாதுகாப்பு போலீஸார்களை அடியோடு நீக்கிய திருட்டு திமுக செய்தது தான் அநாகரிகத்தின் உச்சம்.


Kasimani Baskaran
செப் 15, 2024 06:54

டூல் கிட் வைத்து புத்தியில்லாமல் வேலை செய்தால் உண்மைகள் வெளிவந்து பல்லிளிக்கும் என்பது கூட இதுகளுக்கு தெரியாதது துரதிஷ்டம். கொள்ளையோ கொள்ளை என்பது போல ஒரு காப்பியைக்கூட சர்வதேச விலையில் விற்கும் ஒரு பணக்காரர் நடத்தும் விடுதி ஜிஎஸ்டி யில் தில்லாலங்கடி வேலை செய்வதை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை