உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி அரசு ஆபீசில் மிரட்டல் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி அரசு ஆபீசில் மிரட்டல் பேச்சு

ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி கிராம உதவியாளர் ஆண்டி. சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவரின் மகன் பிரகாசம், 40, கூலி தொழிலாளியான இவர், கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த, 5ம் தேதி பிரகாசத்துக்கு ஆதரவாக, வி.சி., கட்சி சேலம் வடக்கு மாவட்ட துணை செயலர் ஆறுமுகம், காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் சென்று, அரசு அலுவலர்களிடம் விசாரித்தார்.'பிரகாசம், கருணை அடிப்படையில் வேலை கேட்ட விண்ணப்பத்தை ஏன் தாமதம் செய்கிறீர்கள்' எனக்கேட்டு, வாக்குவாதம் செய்து, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசினார். அதிகாரிகள், கேட்டுக் கொண்டு, சும்மா இருந்தனர்.வழக்கமாக, தி.மு.க., கட்சியினர் தான் இவ்வாறு பேசுவர். இப்போது கூட்டணி கட்சியினரும் இவ்வாறு பேசுகின்றனரே என அதிகாரிகள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ