உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் பா.ஜ., நிர்வாகியிடம் விசாரணை

ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் பா.ஜ., நிர்வாகியிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லோக்சபா தேர்தலின்போது, ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து, பா.ஜ., நிர்வாகி கேசவ விநாயகனிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டாவது முறையாக விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை எடுத்துச் சென்ற, நயினார் நாகேந்திரன் ஹோட்டல் ஊழியர் மற்றும் உறவினரும் சிக்கினர்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், பா.ஜ., நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரித்துள்ளனர். இதற்கிடையே, ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா, பணத்திற்கு உரிமை கோரினார். அவரின் வங்கி கணக்கு, வரவு செலவு விபரங்களை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், பணம் முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.அதேபோல், எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, கேசவ விநாயகனுக்கும், 'சம்மன்' அனுப்பினர். அதன்படி அவர், நேற்று காலை 11:00 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 01:56

இவருக்கு வருகின்ற கட்டப்பஞ்சாயத்து வருமானத்துக்கு இந்த 4 கோடி ஹவாலா பணம் எல்லாம் ஒருநாள் மூக்குப்பொடி போடுற காசு.


Jysenn
அக் 08, 2024 12:08

The central government of modi is spineless and useless and has become a liability. India needs a bold, brave and courageous head not a cowardly one.


Neutrallite
அக் 08, 2024 11:21

"இது மற்ற கட்சிகளை பழி வாங்கும் செயல். பாஜக எல்லா காட்டுலயும் சிங்கம். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. "


GMM
அக் 08, 2024 07:59

ரூபாய் 4 கோடியை தேர்தல் தமிழக பறக்கும் படை பிடித்தாலும், மாநில போலீஸார் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது. மத்திய விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்படைக்க வேண்டும். SBI, RBI யிடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் இந்திய ரயில்வே போலீசார் இருப்பதால், தமிழக போலீஸார் ரயில்வே போலீஸார் அனுமதி பெறவேண்டும். அரசியல் விளையாட்டில் சட்டம், நிர்வாக விதியை மீறினால் தண்டிக்க யாராவது முன் வரவேண்டும். இஷ்டம் போல் மாநில நிர்வாகம் செயல்பட நீதிமன்றம் முக்கியகாரணம். பல நீதிமன்றங்கள் அதிகாரம் , சட்ட நிர்வாக எல்லைதாண்டி சர்வசாதாரணமாக வழக்கறிஞர் கோரிக்கை ஏற்று செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு இதன் தாக்கத்தை புரிய விரும்பவில்லை.


S.L.Narasimman
அக் 08, 2024 07:56

வோட்டுக்கு நீங்கள் பணம் கொடுக்கும்போது ஆட்சிக்கு வந்தா புத்தன் மாதிரி சுரண்டாமல் இருந்து விடுவீர்களா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை