உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிமி அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க விசாரணை

சிமி அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க விசாரணை

கோவை: 'சிமி' அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்தல் தொடர்பாக, குன்னுார் நகராட்சி அலுவலகத்தில் இன்றும், நாளையும்(ஜூன் 18, 19) விசாரணை நடக்கிறது.

கோவை மாநகர போலீசார் அறிக்கை:

இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பை(சிமி) ஒரு சட்ட விரோத அமைப்பாக அறிவித்தல் தொடர்பாக, டில்லி ஐகோர்ட் நீதிபதி புருசைந்திர குமார் கவுரவ் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) நடுவர் மன்றம், குன்னுார் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்றும், நாளையும் நடக்கிறது.இதுகுறித்து சாட்சியம் அளிக்க விரும்புவோர், தங்கள் பிரமாண பத்திரங்களை(இரு நகல்கள்) தாக்கல் செய்யலாம். காலை, 10:00 மணி முதல் விசாரணை நடைபெறும் நிலையில் குறுக்கு விசாரணை ஏதேனும் இருப்பின், அதற்கான நடுவர் மன்றத்தில் நேரில் ஆஜராகலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balaji Radhakrishnan
ஜூன் 18, 2024 13:33

ஏற்கனவே இந்த அமைப்பு தேசியத்திற்கு எதிராக பல செயல்களை செய்துள்ளன. அப்படி இருக்க இதற்கு எதுக்கு ஆலோசனை.


RAJ
ஜூன் 18, 2024 11:38

ஏன்? இவனுங்க நாட்டுக்கு ஏதவாது நல்லது பண்ணப்போறாங்களா என்ன??


N Sasikumar Yadhav
ஜூன் 18, 2024 09:45

பயங்கரவாத செயல்கள் செய்தால் செய்ய தூண்டுதல் மூளைச்சலவை செய்து பழமைவாதத்தை புகுத்தினால் தடைசெய்ய வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை