உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளியூர் வேட்பாளர்களுக்கு கோவையில் இடமில்லையா?

வெளியூர் வேட்பாளர்களுக்கு கோவையில் இடமில்லையா?

கோவை : கோவை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை தோல்வி அடைந்திருப்பதற்கு, மற்றொரு 'சென்டிமென்ட்'டையும் பலர் காரணம் காட்டுகின்றனர். கோவையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் லோக்சபா தொகுதியில், இதுவரை போட்டியிட்ட வெளியூர்காரர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்பது தான் அந்த காரணம். கட்சி துவக்கிய பின், முதல் முறையாக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், கமல் போட்டியிட்டார். அவருக்கு இருந்த புகழ் காரணமாக, அவர் உறுதியாக ஜெயிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் தோல்வியடைந்தார். தமிழக அரசியல் தலைவர்களில் அப்பழுக்கற்ற தலைவராகக் கருதப்படும் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு, இதே கோவை தொகுதியில் தோல்வியடைந்தார்.அதேபோல, மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகக் கருதப்படும் சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளரும், மா.கம்யூ., மூத்த தலைவருமான சவுந்தரராஜன், தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த சிங்காநல்லுார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெறும் 14 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தல் 'சென்டிமென்ட்'டில், இன்னொரு விநோதமும் அரங்கேறியுள்ளது.ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் திருப்பூர் இருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த குப்புசாமி, காங்., சார்பில், கோவை எம்.பி.,யாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பின், அவருடைய அண்ணன் மகனான சி.பி.ராதாகிருஷ்ணன், இதே கோவை தொகுதியில் பா.ஜ., சார்பில் 1998, 1999 ஆகிய இரு தேர்தல்களிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார். ஆனால் கோவையிலிருந்து கடந்த 2009ல் திருப்பூர் மாவட்டம் பிரிந்த பின்பு, அவர் வெளியூர்வாசியாகக் கருதப்பட்டார். கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தல்களிலும், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டபோதும், இரண்டிலுமே அவரால் இரண்டாமிடமே பிடிக்க முடிந்தது.அதேபோல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, புகழும், செல்வாக்கும் மிக்க தலைவராயிருந்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

வலியவன்
ஜூன் 05, 2024 16:31

என்ன நடக்குது இங்கே, எத எடுத்தாலும் பிஜேபி என்னமோ ரொம்ப புனிதமான கட்சி மாறி பேசுரிங்க. 3லட்சம் கோடி அடிச்சுட்டு உத்தமன் மாதிரி பேசுராங்க


Selvakumar Krishna
ஜூன் 05, 2024 15:16

எந்த நோக்கனும் அப்படி பார்க்கவில்லை, ஆடு பலியானதுக்கு நீங்களே ஒரு மொக்கை காரணம் கண்டுபிடிக்கிறீர்கள்


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூன் 05, 2024 14:10

மக்கள் கையூட்டு பெற்று வாக்களிப்பதால் மட்டுமே சில கட்சிகள் வெல்ல முடிகிறது. சுமார் 70 சதவீத வாக்காளர்கள் கையூட்டு பெறுகின்றனர். மீதி உள்ள 30 சதவீத வாக்காளர்கள் பிஜேபி மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். எனவே இவர்கள் எப்போதும் வெல்லபோவதில்லை. தமிழ்நாட்டில் பிஜேபிக்கு வாய்ப்பில்லை என்பதற்கு இதுவே காரணம். நாம் தமிழர் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தாண்டி வளர முடியாது.


AaaAaaEee
ஜூன் 05, 2024 12:52

கோவை காரர்கள் குசும்பன்கள்


kalyan
ஜூன் 05, 2024 12:29

பி ஜெ பி யின் சறுக்கல் என்றும் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியில் சேரும் தலைவர்களுக்கு தேர்தலில் நிற்க அவசரம் கொடுத்து அந்த தொகுதியில் பல காலம் உழைத்த தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாவது தான். தமிழிசை சௌந்திரராஜன் போன்றோரை பலமுறை மக்கள் நிராகரித்து விட்டனர். கிடைத்த ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து அண்ணாமலை உருவாக்கிய கட்சியின் பலத்தை உபயோகப்படுத்தி தேர்தலில் வெல்லலாம் என்று கனவு கண்டு வந்தாலும் அவரை போட்டியிட்டிருக்கக் கூடாது. மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர். நல்ல தலைவராக இருந்தாலும் நாகாக்க வேண்டிய கட்டாயத்தை அண்ணாமலை தற்போது உணர்ந்திருப்பார் அண்ணா, ஜெயலலிதா போன்ற கட்சிகளை பற்றி பேசுவதும் , தினகரன் பண்ணீர்போன்ற உழல்வாதிகளி ன் ஆதரவு தேடியதும் பெருந்தவறு . எடப்பாடி மாநிலத்தேர்தலில் கணிசமான இடங்களை வென்றது அ ம மு க வை சேர்த்துக்கொள்ளாதது தான்


venugopal s
ஜூன் 05, 2024 12:24

கொங்கு நாட்டுக் காரனுக்கே கொங்கு மண்ணில் தோல்வி என்றால் என்ன அர்த்தம்? நமது மக்களுக்கு இந்த கொங்கு மக்கள், கொங்கு நாடு போன்ற பிரிவினைவாத அரசியல் பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்!


வலியவன்
ஜூன் 05, 2024 11:11

யார் சொன்ன பிஜேபி ஊழல் இல்லாத கட்சினு, 3லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கும் தெரியுமா. பாவம் சில மக்கள் இன்னும் மாக்காள இருக்காங்க


GMM
ஜூன் 05, 2024 10:42

உண்மை தான். ஊழல் ஒழிப்பு முதல் பணி என்று கூறி ஊழல் வழக்கில் சிக்கியவர்களை கட்சியில் சேர்த்து இருப்பர். இது எந்த கட்சியும் தவிர்க்க முடியாது. ஆனால் ஆளும் கட்சி மீது பொதுவாக அதிகாரிகள் வழக்கு நடத்த முற்படுவதில்லை. இது மத்திய, மாநில அரசுக்கு பொருந்தும். பிஜேபி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் மற்றும் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்க திரிமுல்லா, ஆம் ஆத்மி யை கூறலாம். ஊழலை குறைக்க தான் முடியும். ஒழிக்க முடியாது. அவ்வளவு நுட்பமான விதி வகுக்க அலுவலர்கள் இல்லை?


Suresh sridharan
ஜூன் 05, 2024 09:36

நடுநாயகமாக நிற்க வேண்டிய மக்கள் ஓட்டு போடும் நாள் முழுமையாக ஒவ்வொரு ஊர்களுக்கும் ஊர் சுத்த சென்று விட்டனர் அவர்களுக்கு ஓட்டு முக்கியமல்ல அவர்களுக்கு சுற்றுலா தான் முக்கியம் நாடு முக்கியமல்ல அவர்களுக்கு அவர்கள் வேலை தான் முக்கியம் அதனால் வந்த வினை


N MARIAPPAN
ஜூன் 05, 2024 08:57

அண்ணாமலைக்கு எங்கயுமே இடமில்லை


Mohan
ஜூன் 05, 2024 11:48

இந்தளவுக்கு தனிமனித வெறுப்பை அரசியலில் காண்பிக்கும் நீங்கள் எந்தக்கட்சிக்கு ஆதரவளித்தாலும் அவர்களுக்கு மதிப்பு குறைவுதான். படித்தவர்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் கருத்து சொல்வது மரியாதை குறைவு என நினைக்கும்படி ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன் "தினமணி இன்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் "தி ஹிந்து"" நாளிதழ்களில் ஆசிரியருக்கு எழுதப்படும் கடிதங்கள் சிந்திக்க வைப்பதாகவும் விஷயஞானம் உள்ளதாகவும் இருக்கும். இப்பொழுது உள்ளங்கையில் உலகம் இருந்தும் தமிழக ஊடகங்களில் கண்ணியம் குறைந்து விட்டது மனதுக்கு வருத்தமளிக்கிறது.


KRISHNA
ஜூன் 05, 2024 12:04

சிங்கம் அண்ணாமலை அவர்கள், பாஜக கட்சியில் சேர்ந்த சில வருடங்களிலேயே, இப்போது கோவை பாராளுமன்ற தேர்தலில், தி மு க , அ தி மு க கூட்டணி இல்லாமல், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஓட்டுகள் வாங்கியுள்ளார். இது ஒரு மாபெரும் சாதனை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை