உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி

திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை. பீர் தான் முக்கியம்' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் நடந்த பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v3ydrduz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கேரளா பயணம் ஏதுக்கு?

ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பஸ்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. புதிய பஸ்கள் வாங்குவதாக திமுக ஆட்சியில் பொய் கூறுகின்றனர். சென்னையில் மின்சார பஸ்களுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,

அதிமுக ஆட்சியில் தான் 14 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்களில் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் துவங்கிய காரணத்தினால் நீர்வளத்திட்டங்களை திமுக அரசு கைவிட்டதே தற்போதைய வறட்சிக்கு காரணம். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் மீதமிருந்த 15 சதவீத பணிகளை நிறைவேற்றினால் 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். நிலவும் கடும் வறட்சியால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கச் செல்வது சரியா?. இவ்வாறு அவர் கூறினார்.

பீர் முக்கியமா?

குடிநீர் தட்டுப்பாடு நிலைவும் வேளையில், குடிமகன்களுக்கு கோதுமை பீர் அறிமுகப் படுத்துவதாக அரசு சொல்கிறது? என நிருபர்கள் கேள்விக்கு, '' இது தான் நாட்டுக்கு முக்கியமா?. குடிநீர் முக்கியம் இல்லை. பீர் தான் முக்கியம். எப்போதும் இந்த தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததோ?, மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதில் தான் அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதனால் அதில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள் என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்புசாமி
மே 04, 2024 19:14

டாஸ்மாக் என்னும் உலக்ப் புகழ்பெற்ற நிறுவனத்தை துவக்கிய கட்சிக்காரர் பீர் முக்கியமான்னு கேக்கறாரு. தெரியலியேப்பா...


Siva
மே 04, 2024 18:09

இவர் ஆட்சி செய்த காலத்தில் இதைப் பற்றி சொல்லவில்லை எல்லாம் வல்ல இறைவன் செயல்


குமரி குருவி
மே 04, 2024 17:03

தி.மு.க.தமிழக தமிழர்களுக்கு சொர்க்கத்தை மது மூலம் காட்டி வருகிறது..


theruvasagan
மே 04, 2024 16:24

பங்காளிக்கு இந்த மாச பங்கு வரலை போல. அதான் இந்த கடுப்பு.


Palanisamy Sekar
மே 04, 2024 15:56

உண்மையிலேயே திமுகவை எதிர்ப்பவராக இருந்திருந்தால் பாராளுமன்ற தேர்தலில் எதற்க்காக திமுக சொற்படி நடந்தீர்கள்? உங்கள் மீதான கொடநாடு கொலைவழக்கை தள்ளிப்போட்டதால் உங்களுக்குள் இருக்கும் பங்காளி பாசத்தில் இப்போ பேசுவதெல்லாம் சும்மா ஒப்புக்கு சப்பாணிபோல நீங்கள் நம்பத்தகுந்த ஆளே இல்லை


அசோகன்
மே 04, 2024 15:54

எப்படி மக்களை தூண்டிவிட்டு ஓட்டு வாங்குவது இதுதான் முக்கியம்....... காவிரியில் தண்ணீர் வரலைனாதான் உங்களுக்கு கொண்டாட்டம்


babu
மே 04, 2024 14:24

தனியார் நடத்துன மது விற்பனை அரசுக்கு மாத்துனது யாரு


Siva
மே 04, 2024 18:10

அப்போது வேறாய் இப்போது கூமூட்டை மாடல் வாய்


Ram pollachi
மே 04, 2024 13:45

வெய்யிலுக்கு மோர் தான் முக்கியம்.


Rajamani K
மே 04, 2024 13:29

நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நீங்க மட்டும் என்னவாம் மதுவை ஒழிப்போம் என்று சொல்ல திராணி உள்ளதா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி