ஜாபர் சாதிக் காவல் நீட்டிப்பு
சென்னை:ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 6 வரை நீட்டித்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கைதான ஜாபர் சாதிக் தற்போது புழல் சிறையில் உள்ளார். அவரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் முன் நேற்று மாலை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார்.இதையடுத்து, செப்., 6 வரை காவலில் அடைக்க நீதிபதி ஜெ.சந்திரன் உத்தரவிட்டார்.