உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயகுமார் வாயில் நல்ல வார்த்தை வராது!: ஓ.பி.எஸ்., தாக்கு

ஜெயகுமார் வாயில் நல்ல வார்த்தை வராது!: ஓ.பி.எஸ்., தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''படுதோல்வியில் இருந்து பாடம் கற்கவில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது,'' என, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ரத்தம் சிந்தி வளர்த்த கட்சி, படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும்.லோக்சபா தேர்தலில் இரட்டை இலை, ஏழு லோக்சபா தொகுதிகளில் 'டிபாசிட்' இழந்துள்ளது; 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், இரண்டு இடங்களில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது. பொதுத் தேர்தல் உட்பட, தொடர்ந்து 10 தேர்தல்களில் அ.தி.மு.க., வீழ்ச்சி அடைந்ததற்கு பழனிசாமி தான் காரணம். இந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காக, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் இணைய வேண்டும் என, தொண்டர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். மக்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர்.இன்று இருக்கிற நிலையில், பொதுமக்கள் அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பது தான் உண்மை. ஜெயகுமாருக்கு பதில் கூறத் தேவையில்லை. அவர் வாயில் நல்ல வார்த்தை வராது. கட்சி படுதோல்வியில் பாடம் கற்கவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ms Mahadevan Mahadevan
ஜூலை 12, 2024 13:26

பன்னீர்செல்வம் சுத்த வெஸ்ட்.இயலாத மாடு கொம்பை ஆட்டிய கதை தான்


Kannan Maravan
ஜூலை 13, 2024 06:48

ஜெயக்குமார்கும் உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை இரண்டும் கூமுட்டைகள்.


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 12, 2024 12:20

எப்பெல்லாம் தீயமுகவிற்கு உதறல் எடுக்குதோ, அப்பவெல்லாம் ஜெயக்குமார் தலையிட்டு இந்த மாதிரி பேசி அதிமுக பாதாளத்திற்கு செல்லுகிறது என்று நிரூபித்து தீயமுகாவை திடப்படுத்தி விடுகிறார்.


Santhanam Deena
ஜூலை 12, 2024 12:01

கட்சி பிளவடைய ஜெயக்குமாரின் பதவி ஆசையும் ஒரு காரணம்.


Santhanam Deena
ஜூலை 12, 2024 12:00

கட்சி பிளவடைய ஜெயக்குமாரின் பதவி ஆசையும் ஒரு காரணம்.


Santhanam Deena
ஜூலை 12, 2024 12:00

கட்சி பிளவடைய ஜெயக்குமாரின் பதவி ஆசையும் ஒரு காரணம்.


Kadaparai Mani
ஜூலை 12, 2024 11:57

பன்னீர் உங்கள் அளவுக்கு சுயநலம் உள்ளவர் எந்த இயக்கத்திலும் இல்லை .நீங்கள் அதிமுகவிற்கு எதிர் கூட்டணி இல் போட்டிபோட அசிங்கமா இல்லை


Kannan Maravan
ஜூலை 13, 2024 06:45

அவருடைய பலத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயம் . நின்றார் நிருபித்தார்.இதுதான் உண்மை


jayvee
ஜூலை 12, 2024 11:37

அதிமுகவின் அதிகாரபூர்வ தவளை வாய் இந்த ஜெயக்குமார் ..


karthik
ஜூலை 12, 2024 09:52

சரி அய்யா, எடப்பாடி தலைமை ஏற்கிறாரோம்னு வெளிப்படையா சொல்லுங்க..


jamal mohideen
ஜூலை 12, 2024 11:42

அவன் எப்படி சொல்லுவான்


Kannan Maravan
ஜூலை 13, 2024 07:02

ஏன் சொல்ல வேண்டும் பத்து தோல்வி படுபாவி தலைமை வேண்டாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை