உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி மகாதேவன் பெயர் சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை

நீதிபதி மகாதேவன் பெயர் சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை

சென்னை:உச்ச நீதிமன்ற நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத் போஸ், போபண்ணா, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெற்றனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு இடங்கள் காலியாகின. இதற்கு, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் பரிசீலிக்கப்பட்டனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று கூடி, இரு நீதிபதிகள் பெயரை பரிந்துரைப்பது என முடிவெடுத்து, மணிப்பூரை சேர்ந்த நீதிபதி கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.மணிப்பூரை சேர்ந்த கோட்டீஸ்வர் சிங், 2011 அக்டோபரில், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மணிப்பூரில் உயர் நீதிமன்றம் அமைந்த பின், அந்த மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஜம்மு - காஷ்மீர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.இவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்ததாக இருக்கும். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து, உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் முதல் நீதிபதியாகவும் இருப்பார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதித்துறை பணிகளில் பரிச்சயமானவர்; மூத்த நீதிபதி; பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில், மூன்றாவது இடத்தில் உள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, இவர் தகுதியானவர் என கருதி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை