உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளர் பள்ளிகள் கல்வி துறையுடன் இணைப்பு இல்லை

கள்ளர் பள்ளிகள் கல்வி துறையுடன் இணைப்பு இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை, பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் மதுரையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளி கல்வித்துறையோடு இணைக்கும் திட்டம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு செய்திக்குறிப்பு:பிரமலை கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், 299 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு வழங்கி வருகிறது.இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. இப்பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், தனித்துவத்தோடு இயங்கி வருகின்றன.இவற்றை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. எனவே, இப்பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதும், உள்நோக்கம் கொண்டதுமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிங்கச்சாமி
ஆக 24, 2024 08:45

2047 க்குள்ளாறயாவது அவங்களை சீரமைச்சுடுவோம்னு அடிச்சு உடுங்க. அப்புறம்.பாத்துக்கலாம். தனித்துவமாய் இயங்கி பெரிய பெரிய ஆபீசர்கள், விஞ்ஞானிகளை உருவாக்குற மாதிரி நினைப்பு.


Kasimani Baskaran
ஆக 24, 2024 06:58

ஏன் தமிழக கல்வித்துறையுடன் இணைய இப்படி பயப்படுகிறார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை