உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு வலியுறுத்தல்

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை திறந்து விடுவதை கர்நாடகா உறுதிசெய்யும்படி உத்தரவிட வேண்டும்' என்று, காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில உறுப்பினர்கள், வீடியோ கான்பரன்சிஸ் வாயிலாக மாநில தலைமைச் செயலகங்களில் இருந்து பங்கேற்றனர்.தமிழக அரசின் சார்பில், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கடந்த ஜூன் 1 முதல் செப்., 10 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகிய விபரங்களை தமிழக அரசு தெரிவித்தது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இதே காலகட்டத்தில் 98.633 டி.எம்.சி., நீர் தரவேண்டும். ஆனால், கனமழை காரணமாக, 191.660 டி.எம்.சி., பெறப்பட்டுள்ள விபரத்தையும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், தற்போது மேட்டூர் அணையில், 84.431 டி.எம்.சி., அடி நீர் இருப்பதாகவும், அணையிலிருந்து, 23,674 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் உறுப்பினர், 'கடந்த ஜூன் 1 முதல் செப்., 10 வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இயல்பான அளவை விட அதிகமாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது. ஆனாலும், இந்த பருவமழை அடுத்த இரண்டு வாரத்திற்கு இருக்காது. இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.இறுதியாக, இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் மாதங்களில் பிலிகுண்டுலுவில் திறப்பதை கர்நாடகா உறுதி செய்ய, ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட வேண்டும் என்று, தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை, இனி வரும் நாட்களில் மாத வாரியாக கர்நாடக அரசு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில் உள்ள நீரின் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகிய விபரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
செப் 13, 2024 13:05

கடலின் கரையில் அப்பனின் சமாதி இருப்பதால் காவிரி நீரை அனுப்பி கொண்டுள்ளான் போலும் ஸ்டிக்கன் , ஆனாலும் ஆசை விடவில்லை மீண்டும் மீண்டும் தண்ணீர் தேக்கி இருப்பவனை நோக்கி கேட்டுக்கொண்டே உள்ளான் அவன் , முதலில் போஸ்டர் , அப்பனின் பெயருக்கு வைக்கும் செலவு போன்றவற்றை குறைத்தாலே ஒரு அணையை கட்ட முடியும் என்று அவனுக்கு யாராவது சொல்லுங்களேன் , அணையை கட்ட வக்கில்லை சைன்ட்டிபிக் பற்றி பேச வந்துட்டாங்க Muட்டாள் அமைச்சர்கள் என்றும் பெருமை பட்டுகொள்ளலாம்


Kumar Kumzi
செப் 13, 2024 12:16

உங்க கூட்டணி பாஸ் பப்பூ உலகெல்லாம் போயி இந்தியாவை பத்தி கேவலமா பேசுறான் அவனிடம் சொல்லி கர்நாடகாவை தண்ணீர் திறக்க சொல்லலாமே


Ganapathy
செப் 13, 2024 11:51

நீட்டுக்கு எதிராக மத்தியரசுக்கு எதிரா தூண்டிவிட மட்டும் இவனால எப்படி எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிச்சது? அட கிரிமினல் கேப்மாறி திருட்டுத்திராவிடிய களவாணிகழக மொக்க பயலே.


V RAMASWAMY
செப் 13, 2024 10:42

அளவுக்கு மீறிய வெள்ளம் வரும் வரை கொட்டித் தீர்த்திருக்கிறது இயற்கை அன்னை வாரி வழங்கிய மழை. அதையும், கொள்ளிடம் தடுப்பு ஆணை உடந்ந்து நீர் கடலில் கலக்கும் அவலங்களையும் தடுத்து சேமிப்பு செய்ய துப்பு கிடையாது. தமிழக பல அணைகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மழை நின்றவுடன் கர்நாடகாவில் திருவோடு ஏந்தவேண்டிய வேலை தான் இவர்களுக்கு. சிரிப்புத்தான் வருகுதய்யா.


rao
செப் 13, 2024 10:10

Karnataka was always insisting that to avoid surplus water draining into the sea, it suggested that dam across Mekadatu could be built and surplus water can be stored and used during crisis for benefits of both the states.


ஆரூர் ரங்
செப் 13, 2024 09:25

டெல்டா மாவட்டங்களிலிருந்த ஆயிரக்கணக்கான ஏரி குளம் குட்டை ஆக்கிரமிப்புகளில் அதிகபட்ச பங்கு திராவிஷ ஆட்களுயவை. அவற்றை மீட்டிருந்தால் கடலுக்கு அனுப்பப்பட்ட நீரில் பெருமளவு சேமிக்கப்பட்டிருக்கும்.இப்போது கர்நாடக அரசைக் கெஞ்சத் தேவையில்லை. ஆக திமுக வுக்கு வாக்களித்த மூடர்களே வில்லன்கள்


Kamaraj
செப் 13, 2024 08:21

The ruling government in Tamilnadu has not initiated any action to save surplus Cauvery water by constructing check dams, creating new water resources etc., and allowed the water drain into the sea. We have seen the recent pathetic situation when we receive overflowing water from Karnataka dams. Unless the thinking process of accepting frees including selling of votes the blaming drama will continue for ever


கூமூட்டை
செப் 13, 2024 08:13

மக்கள் மாங்காய் மடையர்கள் என்று கூமூட்டை திராவிட மாடல் நினைத்து விட்டது. அறிவியல் மக்கள் பணத்திற்கு வாக்குகள் அளிக்க வேண்டும். வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி


SUBBU,MADURAI
செப் 13, 2024 06:43

டாஸ்மாக்கை மூடாவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்று ஸ்டாலினிடம் நேரடியாக தைரியமாக கேட்காமல் திருமாவளவன் மதுவை ஒழிக்க திமுவிடம் வலியுறுத்துவோம் என்று எப்படி பம்மாத்து வேலை காண்பிக்கிறாரோ அதே போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரியில் தண்ணீரை ஒழுங்காக திறந்துவிடா விட்டால் காங்கிரஸ் தலைமையிலான புள்ளிக் கூட்டணியில் இருந்து திமுக விலகிக் கொள்ளும் என்று சொல்ல தைரியமில்லாமல் காவிரி ஒழுங்காற்று குழுவில் வலியுறுத்துவார்களாம் இதுதான் திருட்டு திமுகவுடைய திராவிட மாடலின் பம்மாத்து அரசியல் தமிழக மக்களை இங்குள்ள அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று அவர்களுக்கு ஓட்டுப் போடும் இங்குள்ள சோற்றாலடித்த பிண்டங்கள் உணர வேண்டும்.


Palanisamy Sekar
செப் 13, 2024 06:14

இப்படியே இவர்கள் வாயால் வடை சுட்டுக்கொண்டே மத்திய அரசை வேறு வம்புக்கு இழுப்பார்கள் தலையிடு செய்து முடித்துத்தர. இவர்கள் கூட்டணியில் அண்ணா தம்பி என்று கொஞ்சுவார்கள். அவர்களால் முடியாத பொது இங்கே வந்து புலம்புவார்கள். சரியென்று மத்திய அரசு தலையிட்டு முடித்து கர்நாடக அரசும் தண்ணீரை திறந்துவிட்டால்...அது இறுதியில் எங்கே போகும்? கடலில் வீணாகுமே தவிர அதனால் ஒருபாலனுமே கிடையாது. இது அரசியல் சித்துவிளையாட்டு. தடுப்பணை என்று இதுவரை எதுவுமே செய்திடவில்லை. கல்லணையில் தடுப்பணை போட்டார்கள். சிறிய அளவு நீரிலே அது அடித்து செல்லப்பட்டது. அந்த அளவுக்கு ஊழலோ ஊழல் அதிலே. கட்சிக்காரர்கள் மூலம் அதனை காட்டியதால் விசாரணை கூட கிடையாது. அணைத்து ஊடகங்களும் வாய்பொத்தி அதனை மறைந்துவிட்ட நிலையில். இப்போது கேட்டுப்பெறுகின்ற நீர் எங்கே போயி சேரும் என்று கர்நாடகா கேட்டால்..இந்த நீர் கிடைக்குமா என்று யாராவது சொல்ல முடியுமா என்ன? தெண்டம் இந்த மாடல் அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை