உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி; முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம்

கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி; முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிடும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி நாணயம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50க்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். கருணாநிதியின் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமர் கடிதம்

இந்த நிலையில், கருணாநிதியின் நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 16ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

புகழாரம்

பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். பலமுறை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட அவர், அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு அதிகமாக குரல் கொடுத்துள்ளார். 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Ramesh Sargam
ஆக 19, 2024 20:10

நாணயம் என்கிற தூண்டிலில் திமுக எனும் சுறாமீன் சிக்குமா?


S.L.Narasimman
ஆக 19, 2024 08:07

நம் நாட்டின் நாணய மதிப்பு குறைந்து கொண்டு போவது இதனால்தானோ. மோடிக்கு வந்த சோதனை..


S.L.Narasimman
ஆக 19, 2024 08:01

தேசவிரோதிக்கு சிலை வைத்து மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்


Karthi
ஆக 19, 2024 06:15

Purilya


வைகுண்டேஸ்வரன்
ஆக 18, 2024 22:42

இன்றும் நாளையும், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், வயத்தெரிச்சல் மாத்திரை இலவசம். இங்கே எரியும் பலரும் வந்து வாங்கி பயன் பெறவும். நன்றி.


வைகுண்டேஸ்வரன்
ஆக 18, 2024 22:39

எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களில் நம்பர் 1 பிஜேபி ஆதாரவாளர்கள் தான் என்பது இங்கே கதறியிருக்கும் கதறல்களில் தெரிகிறது. கலைஞர் ஒரு சகாப்தம் என்பதை இன்னும் உணராதவர்கள் பாவம். நகைப்புக்குரியவர்கள்.


bala
ஆக 18, 2024 20:47

மோடிஜீ எப்படி சறுக்கினார்? ஊறுகாய் என் விளித்தவர்களுக்கு எவ்வாறு அனுமதித்தார்? நாணயம் மே பதிப்பித்து விட்டது.


M Ramachandran
ஆக 18, 2024 20:22

காளிமுத்து கொலையும் தா கிருட்டிணன் கொலையும் கண்ணுக்கு முன்னெ வருதே


M Ramachandran
ஆக 18, 2024 20:21

என்ன நடக்குது இங்கே??? நம்ப முடிய வில்லை. நாணய மற்ற ஆளுக்கு நாணயம்??? கீதையின் குரலில் சொன்ன 5 மா பாதகங்கள் என்னனயிற்று கடவுளெ அரசியல் அரசியல் அரசியல். எது பெரிய மீன் எது சின்ன மீன் எதை எப்போது விழுங்க போவுது ஒரே குழப்பம்.


Muralidaran
ஆக 18, 2024 19:49

வெட்கம் இல்லாத அரசியல் வாதிகள். லால்பகதூர் சாஸ்திரி கருணாநிதி யம் ஒன்று .அண்ணாமலைக்கு அரோஹரா .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ