உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? வெளிவராத பின்னணி தகவல்கள்

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? வெளிவராத பின்னணி தகவல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்; கவரைப்பேட்டை ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gkvej0j0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விபத்து

மைசூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்றிரவு(அக்.11) விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தின் போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 1,650 பயணிகள் இருந்துள்ளனர்.

பேரிடர் குழு

ரயில் பெட்டிகள் தடம்புரண்டதோடு, இருட்டு நேரம் என்பதால் மீட்புப் பணிகளில் சிக்கல் எழுந்தது. உள்ளூர் மக்கள் முதல்கட்டமாக பயணிகளை மீட்க ஆரம்பித்தனர். மொத்தம் 13 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

சிகிச்சை

விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சென்றனர். துணை முதல்வர் உதயநிதி நள்ளிரவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

ரயில்கள் ரத்து

விபத்து காரணமாக திருப்பதி-புதுச்சேரி, சென்னை-திருப்பதி உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 15 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்க திருப்பவிடப்பட்டு உள்ளன. ரயில் விபத்தை தொடர்ந்து, கிரேன் உதவியுடன் தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

என்ன நடந்தது?

இந்நிலையில், விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மைசூரில் இருந்து வந்த பாக்மதி ரயில் சென்னை பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு உள்ளது. அங்கிருந்து சரியாக 8.27 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. மெயின் லைன் வழியாக தான் ரயில் செல்ல வேண்டும்.

லூப் லைன்

ரயில் செல்வதற்கு ஏற்ப, க்ரீன் சிக்னலும் ரயில்வே தரப்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனில் சென்றுள்ளது. அந்த லைனில் சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தண்டவாளத்தில் வந்த அதே வேகத்தில் சரக்கு ரயிலின் பின்னால் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

நாசவேலையா?

விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த விபத்துக்கு ஏதேனும் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு உள்ள புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rangarajan Cv
அக் 12, 2024 15:50

If rly minister is not improving, installing surveillance including cameras along railway tracks, we won't be finding out the culprit, who are responsible for sabotage. We need both long


Sivagiri
அக் 12, 2024 13:09

மெயின் லைனில் செல்ல க்ரீன் சிக்கினால் உள்ளது , ஆனால் ரயில் லூப் லைனில் செல்கிறது ,, அதே நேரம் லூப் லைனில் சரக்கு ரயில் நிற்கிறது , - - சந்தேகமே தேவை இல்லை - இது மூன்றாவது நபரின் வேலைதான் - - - மெயின் லைனில் க்ரீன் சிக்னல் விழுந்தால் ரயில் நேராகதான் சென்றாக வேண்டும் , பஸ் கார் போல , ரயில் ட்ரைவர் , ட்ராக் மாற்றி ஓட்ட முடியாது , ஸ்டியரிங் எல்லாம் கிடையாது , தண்டவாளம் லைன் மாற்றி விடுவதெல்லாம் , சிக்னல் போடுபவர்கள் வேலை , தண்டவாளம் லைன் மாற்றி விட்டால் , ரயில் ஆட்டோமேட்டிக்காக அந்த லைனுக்கு திரும்பி விடும் , ட்ரைவரால் எதுவும் செய்ய முடியாது . . . இப்பேற்பட்ட சதி வேலை செய்ய , இப்போ , தனியாக கேங் இயங்குகிறது


venugopal s
அக் 12, 2024 13:00

மத்திய அரசின் தவறாக இருந்தால் மார்க்கம் மீது பழி போட வேண்டியது, மாநில அரசின் தவறாக இருந்தால் திமுக திராவிடம் என்று பழி போட வேண்டியது, அறிவே இல்லையா இந்த முரட்டு குருட்டு சங்கிகளுக்கு?


N Sasikumar Yadhav
அக் 12, 2024 13:33

சொந்த பெயரில் வர தைரியமில்லாமல் இந்து பெயரில் வரும் அமிதியானவரே பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் காஷ்மீர் பயங்கரவாதி சொன்னதுபோல நடக்கிறது


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2024 16:37

முட்டாளே சமீபத்தில் குனிகல் என்ற ஊரில் மின்சார மயமாக்கல் நடந்து கொண்டிருந்த பொது அந்த ஒயர்களை கத்தரித்து ரயில்வே லைனில் கட்டி வைத்திருந்தனர் , அந்த ட்ரெயினில் நானும் , நண்பரும் பயணித்து கொண்டிருந்தோம் அதனை யூடுப் வீடியோவில் பலரும் பதிவேற்றியுள்ளோம் , உன்னோட கண்களுக்கு மர்ம நபர்கள் காணவே மாட்டார்களே , ட்ரெயின் ஜிஹாத் நடத்திக்கொண்டுள்ளார்கள் என்பதே எனது வாதம்


Barakat Ali
அக் 12, 2024 21:38

செய்தியில் அப்படி இல்லாத போது வேணு மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் மார்க்கத்தின் மீது சந்தேகப்படும்படி கருத்து போடவேண்டும் ????


Rasheel
அக் 12, 2024 12:38

பாகிஸ்தானிய மர்ம நபர்களின் கைவரிசையாக இருக்கும். நாட்டின் வளர்ச்சியை காண பொறுக்காத கூட்டங்களின் சாதியாக இருக்கலாம்.


Raman
அக் 12, 2024 12:17

Investigate thoroughly...check for sabotage..


sridhar
அக் 12, 2024 11:10

தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியதன் பலன்.


madhumohan
அக் 12, 2024 10:34

நிஜ தவறை மாற்றி வேற்றுலக வாசிகளான ஏலியன்ஸ் செய்த தவறு என மாற்ற ரயில்வே அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டுமே ............


Kumar Kumzi
அக் 12, 2024 10:32

தேசவிரோதி மூர்க்க காட்டேரிகளின் வேலையாக இருக்க கூடும்


raja
அக் 12, 2024 09:57

நாசா வேலை கா அனமாக இருக்கவும் வாய்ப்பு இல்லை என்று ஒதுக்கி விட முடியாது... அதிமுக ஆட்சியில் சமூக போராளி ஆர்வலர்கள் என்று திமுகவின் கைக்கூலிகள் நாளொரு போராட்டம் தினம் ஒரு மறியல் என்று செய்தாலும் திமுகவின் தொப்புள் கொடி உறவுகள் கடத்தல் ஹவாலா பயங்கரவாத குண்டு வெடிப்பு செயல்களை செய்யாமல் அடக்கியே வாசித்தனேர்... ஆனால் திமுகா ஆட்சியில் அந்த திமுகவின் கைக்கூலிகள் ஆன சமூக போராளிகள் சமூக ஆர்வலர்கள் அடங்கி எஜமான விஸ்வாசத்தில் வாலாட்ட போய் விட்டார்கள்,..ஆனால் தொப்புள் கொடி உறவுகள் கடத்தல் ஹவாலா கோவையில் சிலிண்டர் வெடிப்பு பகங்கர வாத செய்யல்களை அச்சம் இன்று சர்வ சாதரணமாக செய்கின்றார்கள் என்றால் அது தமிழன் கேவலம் ருவா 2000 ஒரு ஓசி குவார்ட்டர், கோழி பிரியாணிக்கு அடிமையாகி விடியல் வேண்டும் என்று நம்பி ஏமாந்து இந்த திருட்டு திமுகவை ஆட்சியில் அமர்தியதனால் தான்...


Oru Indiyan
அக் 12, 2024 09:27

கடந்த சில நாட்களாகவே இப்படிப்பட்ட நாச வேலைகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சதி வேலைகளுக்கு காரணம் யார்? வெளி நாடுகளா? மத தீவிரவாதிகளா?


Rajagopalan Narasimhan
அக் 12, 2024 12:37

நாசவேலைக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை