உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூகோளம் தெரியாமல் பேசும் கேரளா: துரைமுருகன் சாடல்

பூகோளம் தெரியாமல் பேசும் கேரளா: துரைமுருகன் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: ''வயநாடு நிலச்சரிவுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம் கனிம வளங்களை எடுத்தது தான் காரணம் என கேரளா கூறுவது, பூகோளம் தெரியாத பேச்சு,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில், 20 புதிய பஸ்களை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், 'வயநாடு நிலச்சரிவு விபத்திற்கு, தமிழகம் தான் காரணம். மேற்கு தொடர்ச்சி மலைகளில், தமிழகத்தில் கனிம வளம் எடுத்து விட்டனர் என, கேரள அரசு கூறுகிறதே... மேகதாது பிரச்னையில் அமைச்சர்கள் கையூட்டு வாங்கி விட்டதாக அண்ணாமலை கூறுகிறாரே' என, கேள்வி எழுப்பினர்.கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: தொடை மேல் அடித்தால், வாய் வலிக்கிறது என்பது போல, பூகோளம் தெரியாமல், கேரளா அரசு பேசுகிறது. வயநாடு விவகாரம் பேரிடர். இருதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து, அழ வைத்து விட்டது. அதை கூட, பேரிடராக அறிவிக்க மாட்டோம் என, மத்திய அரசு கூறுவது, அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா, கல்லா என தெரியவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது வரவேற்கத்தக்கது. அண்ணாமலை விவரமே இல்லாத ஒருவர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramesh Sargam
ஆக 06, 2024 20:30

கேட்ட கேள்வியே ஒன்று. அதற்கு இதான் பதிலா? அமைச்சர் கூறிய பதில் - வயநாடு விவகாரம் பேரிடர். இருதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து, அழ வைத்து விட்டது.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:26

மத்தியில் உங்க ஆட்சி நடந்த போது புய‌ல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்றையாவது தேசீய பேரிடர்ன்னு அறிவித்துண்டா? இல்லையே. ஏனெனில் அப்படி ஒரு வழக்கமே இருந்ததில்லை. அதற்கான அளவீடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.


Ram pollachi
ஆக 06, 2024 14:17

தமிழக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ... அமர்ந்து கொண்டு இந்த கேள்வியை கேட்டால் சூப்பராக இருக்கும் ஐயா!


RAAJ68
ஆக 06, 2024 11:13

பினராயி விஜயன் அவர்களே எங்கள் தமிழகத்தின் கனிம வளங்களை சுரண்டி நீங்கள் உங்கள் உபயோகத்திற்கு பயன்படுத்துவதால் தான் உங்களுக்கு இந்த தண்டனை. தமிழகத்தில் இருந்து வரும் கனிம வளங்களை வேண்டாம் என்று சொல்லுங்கள். எங்கள் மலைகள் எல்லாம் சுரண்டப்படுகின்றன. இப்படி சுரண்டுவதால் இயற்கைக்கு மறுபடியும் கோபம் ஏற்பட்டு தமிழகத்தையும் ஒரு தாக்கு தாக்கும். கல் உடைப்பதற்கு மலைகளே இல்லாமல் எல்லாம் புதைந்து VIDUM


xyzabc
ஆக 06, 2024 11:11

என்ன துரை உன் குவாலிஃபிகேஷன் என்ன?


sridhar
ஆக 06, 2024 10:57

உனக்கு தான் எல்லாம் தெரியுமே , போய் நோபல் பரிசு வாங்கிண்டு வாயேன் .


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 09:53

கேரளாவை கிண்டல் பண்ணிட்டா எங்க தொண்டர்கள் ரசிப்பாங்க ..... சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழக விவசாயிகளுக்கு அல்வாவை வாயில திணிச்சுருவோம் ....


Sampath Kumar
ஆக 06, 2024 09:52

சபாஷ் மிக சரியான கருது வயநாட்டின் சம்பவம் ஒரு தேசிய பேரிடரே இல்லை என்று ஒப்புக்கொள்ள மார்க்கும் சனாதனிகள் மனித நேயமே அற்ற மிருக கூட்டங்களே ஆகும் இந்த மிருக கூட்டம் தான் இயற்கைகளை ஒழித்து அழித்து அட்டகாசம் சேயும் கயவர்கள் ஆகுமிந்த கயவர்களை அழித்தால் தான் நாடு உருப்படும் மனித நேயம் வளரவும்


Mahalingam
ஆக 06, 2024 11:56

முதலில் தோழமை கட்சி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் சென்டருக்கு பாய்வது ஏன் கநம கொள்ளையை மூடி மறைக்கும் திருட்டு மு.


veeramani
ஆக 06, 2024 09:33

மதிப்பிற்குரிய அமைச்சர் பேசியது தொழில்நுட்ப ரீதியாக சரியல்ல தமிழக மக்கள் அடிக்கடி அரசிடம் புலம்புகிரோம். தமிழக கனிமவளங்களை தமிழக எல்லைக்குள் மட்டும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும். ஆற்று மண், கி ரவேல் மண், க்ரானைட் சிப்பிகள் போன்ற தமிழக கனிமவளங்கள் தினமும் கேரளாவிற்கு பல நூர் லாரிகள் செல்கின்றன. முதலில் இவைகள் முழுவதும் நிறுத்தப்படவேண்டும். இனிமேல் தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.


Venkatasubramanian krishnamurthy
ஆக 06, 2024 09:29

இதுதான் திராவிட மாடல். கனிமவளங்கள் சுரண்டப்படுவது குறித்து பதிலளிக்காமல் வரலாறு, பூகோளம் என பேசுவதெல்லாம் உள்ளதை மறைத்து உண்மையை மாற்றுவதற்கான தந்திரங்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி