உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு சிறை: சிறப்பு விவாதம்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு சிறை: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிப்பதால், மாற்றம் வருமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

https://www.youtube.com/watch?v=_D11ALZNhmc


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KRISHNAN R
ஜூன் 02, 2024 08:04

முதல் முறை அபராதம். இரண்டாவது முறை வண்டி பறிமுதல். மூன்றாம் நிலை பெற்றோர் சிறை. அந்த சிறுவர்களுக்கு.. லைசன்ஸ் வழங்க கூடாது


Loganathan Balakrishnan
ஜூன் 01, 2024 16:11

நம்ம ஊர்ல கொலை மற்றும் கொள்ளை நடந்தாலும் தண்டனை கொடுக்க சட்டம் இருக்கு ஆனாலும் கொலை எல்லாம் சர்வசாதரணமா நடக்குது இதுவும் அது போன்று ஒன்று தான்


அப்புசாமி
ஜூன் 01, 2024 15:36

வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு பின்னாடி நாலு.பிரம்படி குடுங்க. அப்பத்தான் அடுத்த முறை வாகனம் ஓட்டும்போது பின்னாடி உறைக்கும்.


rasaa
ஜூன் 01, 2024 11:55

வாய்ப்பில்லை ராஜா


rasaa
ஜூன் 01, 2024 11:50

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மாற்றம் வரும்


j.haridoss jain
ஜூன் 01, 2024 11:24

தன் தாய் தந்தையிடம் கேட்டு வண்டி ஓடுவதில்லை .அவர்கள் சற்று ஓய்வு எடுக்கும்போது அவர்களை டபாய்த்து விட்டு வண்டியை ஓட்டி செல்வது தான் எல்லோர் வீட்டிலும் நடக்கிறது .நம் காவல் துறை சின்ன பயல்களுக்கு புத்தி சொல்லி வண்டியை தந்தைகளிடம் ஒப்படைத்து மன்னித்து விட்டால் நல்லது.


sankar
ஜூன் 01, 2024 11:21

மறுபரிசீலனை செய்யவேண்டிய விஷயம் - சட்டம் போட்டு எல்லாத்தையும் மாற்றிவிட முடியாது - மக்கள் மனங்களில் அந்த மாற்றத்தை கொண்டுவரவேண்டும் - இதை வைத்து நிறைய கொடுமைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது - உடனடியாக இத சட்டம் திரும்பபெறப்பட வேண்டும்


sankar
ஜூன் 01, 2024 11:21

சட்டம் போட்டு எல்லாத்தையும் மாற்றிவிட முடியாது - மக்கள் மனங்களில் அந்த மாற்றத்தை கொண்டுவரவேண்டும் - இதை வைத்து நிறைய கொடுமைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது - உடனடியாக சட்டம் திரும்பபெறப்பட வேண்டும்


spr
ஜூன் 01, 2024 11:11

"18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் இன்று ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது." சிறப்பான முடிவு. இதற்கு மட்டுமல்ல, வேறெந்த குற்றங்களுக்கும், 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டுச் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பதால், அதற்கும் பெற்றோர்களுக்கு இது போலத் தண்டனை அளித்தால் ஓரளவு குற்றங்கள் குறையலாம். பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.


Sampath Kumar
ஜூன் 01, 2024 10:17

மாற்றம் எல்லாம் வராது ஏமாற்றம் வேடுமானால் வரும் அம்புட்டு பொறுப்பு உள்ள பருப்புகள் தான் பெற்றோர்கள் இவர்களால் தங்களது பிள்ளைகளை கொன்றோல் பண்ண முடியாது ஆசிரியர்களை என்று மாணவர்களை அடிக்க கூடாது என்று சொன்னார்களா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை