உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூளை உரிமையாளர் மகன் கொலை

சூளை உரிமையாளர் மகன் கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செங்கல் சூளை உரிமையாளரின் மகன் ஞானசேகரை 27, கொலை செய்ததாக மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து, வளர்ப்பு புறா காணாததை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் இடையன்குளத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன். புதுப்பட்டி அருகே செங்கல் சூளை வைத்துள்ளார். இவரது மகன் ஞானசேகர். தந்தைக்கு உதவியாக உள்ளார். செங்கல் சூளையில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த முருகராஜ், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து மூன்று மாதங்களுக்கு முன் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதே செங்கல் சூளையில் உள்ள அலுவலக மாடியில் முருகராஜ் மகன் மணிகண்டன் வளர்த்த புறாக்கள் மாயமானது குறித்து ஞானசேகரிடம் கேட்டதற்கு புறாக்கள் பறந்து விட்டதாக அலட்சியமாக கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் லோடு இறக்க சென்ற ஞானசேகர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.வடக்கு போலீசார் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர்கள் நாகராஜ், பேச்சிமுத்து மூவர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி