மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
9 hour(s) ago | 1
சென்னை:சென்னைக்குள் சட்ட கல்லுாரி அமையும் வகையில், இடம் தேர்வு செய்வது குறித்து, அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பாரிமுனை, உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த டாக்டர்அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரி இரண்டாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் துவங்கப்பட்டன. சென்னையில் இருந்து சட்ட கல்லுாரியை வேறு இடங்களுக்கு மாற்றியதைஎதிர்த்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில், 'சென்னை சட்ட கல்லுாரி 1891ல் கட்டப்பட்டது. அதை புதுப்பித்து, மீண்டும் அங்கு கல்லுாரி இயங்க வேண்டும்' என்று கோரப்பட்டது. அப்போது முதல் பெஞ்ச், 'சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லுாரி என பெயர் வைத்து விட்டு, அதை இரண்டாக பிரித்து, இரு மாவட்டங்களில் வைத்துள்ளனர். பயிற்சிக்கு மாணவர்கள் வந்து செல்வதும், மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களை விரிவுரைகளை கேட்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 'அதனால், சென்னைக்குள் கல்லுாரி அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்வது குறித்து, அரசு பதில் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தது.விசாரணையை, ஏப்ரல் 12க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
9 hour(s) ago | 15
9 hour(s) ago | 3
9 hour(s) ago | 1