உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை நிம்மதியாக படிக்க விடுங்களேன்! கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்

எங்களை நிம்மதியாக படிக்க விடுங்களேன்! கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்

கள்ளக்குறிச்சி நகரின் ஒரு பகுதிதான் கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்த கருணாபுரம். பெயின்டர்கள், மூட்டை துாக்குவோர் என, உடல் உழைப்பு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது.

நல்ல நிகழ்வு, கெட்ட நிகழ்வு

கதவுகளுக்கு பதிலாக போர்வைகளும், சாக்குகளும் இருக்கும், அதிர்ந்து பேசினால் உதிர்ந்து போகும் காரை வீடுகளே இங்கு அதிகம். அன்றாடம் உழைத்து பிழைக்கும் இப்பகுதிவாசிகள், ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்தால் அதுவே அதிகம். இங்கு வசிப்பவர்கள், நல்ல நிகழ்வு, கெட்ட நிகழ்வு என எது நடந்தாலும், கள்ளச்சாராயம் வாயிலாக தான், அதை பகிர்ந்து கொள்வர்; அதாவது, பெரும்பாலானோருக்கு கள்ளச்சாராயம் குடிக்கும் பழக்கம் உண்டு.கள்ளக்குறிச்சியில் நிறைய டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அங்கே வாங்கி சாப்பிடும் அளவிற்கு வசதி கிடையாது; அதில், 'திருப்தியும்' கிடையாது. மேலும், இங்கு 24 மணி நேரமும் தடையின்றி கள்ளச்சாராயம் கிடைப்பதால், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை தேடுவதும் கிடையாது.இப்படித்தான், இம்மாதம், 19ம் தேதி ஒரு இறப்பு வீட்டில் துக்கத்துடன் சரக்கையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, சரக்கு துாக்கலாக இருக்கிறதே என்று எண்ணுவதற்குள் கண் இருட்டியது, வயிறு குமட்டியது.'அய்யோ... அம்மா... என்னைய என்னவோ செய்யுதே, காப்பாத்துங்களேன்' என்ற கதறல் சொல்லி வைத்தார் போல, கள்ளச்சாராயம் குடித்த அனைவரின் வீடுகளிலும் கேட்டது.விபரீதத்தின் வீரியத்தை உணராமல், சாதாரண வயிற்றுப்போக்கு என்று கலெக்டர் சப்பைக்கட்டு கட்ட, 10, 20 பேர் மதியத்திற்குள் பொத்து பொத்தென்று செத்து விழுந்த பின் தான், சம்பவத்தை கள்ளச்சாராய பலி என உறுதி செய்தனர்.கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிப்புக்கு ஆளானவர்கள் பலர், இன்னமும் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் ஆபத்தான கட்டத்தில் தான் உள்ளனர்.ஊரின் ஆரம்பத்தில் ஏதாவது பிளக்ஸ் பேனர் புதிதாக கட்டுகின்றனர் என்றால், சிகிச்சையில் இருந்தவர்களில் ஓரிருவர் அன்றைக்கு இறந்து விட்டனர் என்றே அர்த்தம்.இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை, அரசு அறிவித்த, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தான், ஆறுதல் அடைய வைத்திருக்கிறது. இங்குள்ள ஆண்கள், பெண்கள் யாருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை; ஆனாலும், அடுத்த தலைமுறையாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், வீட்டில் உள்ள பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர்; இப்போது அந்தப் பிள்ளைகள் தான், பாவம் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மீடியாக்கள் முன் அழத்தெரியாமல் இறுகிய முகத்துடன் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் அமர்ந்திருக்கின்றனர்.பெரும்பாலான பிள்ளைகள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் உள்ளனர். இறுக்கத்தை உடைத்து அவர்களில் சிலர், எங்களை படிக்க விடுங்க... எங்க அப்பா அதுக்கு தான் ஆசைப்பட்டார் என கதறுகின்றனர்.இந்த கதறல்கள் தான் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

karutthu
ஜூன் 25, 2024 18:29

கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கிவிட்டது .முதல்வர் இதுவரை அங்கு செல்லாதது வருத்தமளிக்கும் செயல் .சம்பந்தப்பட்ட அமைச்சரும் அங்கு சென்றதாக தெரியவில்லை . கலெக்டர் எஸ்பிஐ இடமாற்றம் செய்வது தேவையில்லை .கீழ் மட்டத்தில் உள்ளவரை டிஸ்மிஸ் செய்யுங்கள் .சம்பந்த பட்ட மந்திரிகளை நீக்குங்கள் இப்படி செய்யாவிட்டால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்


Jagan (Proud Sangi)
ஜூன் 25, 2024 18:26

சாராய விற்பனை கழகங்களுக்கு தான் ஆதரவு. ஒருநாள் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் .


DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 25, 2024 16:12

save பாலஸ்தீன் , சிரியா ..எங்க போச்சு இந்த கும்பல் ..இப்போ save கள்ளக்குறிச்சி children ..


Rajarajan
ஜூன் 25, 2024 15:14

kannadaasan sonnathu தான் நினைவுக்கு வருகிறது. பாவம் செய்தவன் தலைமுறை வரையில் என்று. பொறுத்திருந்து பாருங்கள். சாராய கம்பெனி நடத்தும் அரசின் நிலைமையை எதிர்காலத்தில் .


Barakat Ali
ஜூன் 25, 2024 12:29

ஆனால் விடியல் சொல்லும் திராவிட மாடல் அதை அனுமதிக்காது ......... இன்னும் ..... இன்னும் ....


Ram
ஜூன் 25, 2024 11:46

மீண்டும் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் தமிழ்நாட்டு மக்களும் , ஓட்டுவங்கிக்காக பயன்படும் சிறுபான்மையினர்களும் இருக்கும் வரை தமிழ்நாட்டை காப்பாற்றமுடியாது


Jai
ஜூன் 25, 2024 10:46

இந்த குழந்தை முகம் கண்ணீரை வரவழைக்கிறது. அதே சமயம் அடிமையாகவோ வாக்கு வாங்கிகளாகவோ பயன்படுத்தி கொள்வோரை அடையாளம் காணாமல் மேலும் மேலும் துயரத்தில் விழுவது கோபத்தையும் வரவழைக்கிறது


Maheesh
ஜூன் 25, 2024 10:20

உங்கள் முகம் பாமரனுக்கு வேண்டுமானால் பாவமாகவோ பரிதாபமாகவோ இருக்கும். தலைமை குடும்பமான எங்களுக்கு நீங்கள் சிந்திக்க முடியாத அடிமைகள்.... என்ன இழப்பு வந்தாலும் எப்படியும் அடுத்த தேர்தலில் உங்கள் உற்றாறும் பக்கத்து வீட்டாறாரும் எங்கள் சின்னத்தை தாண்டி வாக்கு அளிக்கப் போவதில்லை. நான், என் மகன் என் பேரன் என்று உங்கள் எஜமானர்களாக இருப்போம்.


sridhar
ஜூன் 25, 2024 09:57

உங்க பெற்றோர்கள் ஒழுங்காக வோட்டு போடாமல் பணம் வாங்கிக் கொண்டு வோட்டு போட்டதன் பலன்


RajK
ஜூன் 25, 2024 09:52

நாங்கள் தயாரித்து விற்கும் சோமபானத்தை வாங்கி குடிக்காமல் நீங்களாக வேறு எங்கோ வாங்கி குடித்தால் எங்கள் வருமானம் என்ன ஆவது? உங்கள் தந்தை செய்த தவறை செய்து விடாதீர்கள். இப்போது குழந்தைகளாக இருக்கும் நீங்கள் வளர்ந்து நல்ல பிள்ளைகளாக எங்கள் சோமபானத்தை பருகி என் மகன், என் பேரன் ஆட்சி நடத்துவதை ஆமோதிக்க வேண்டும். திருந்தி குடியை விட்டுவிட்டு நல்ல வேலைக்கு செல்வோம் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள், உங்களுக்கு பிடித்த நடிகர்களை குடிக்க வைத்து காட்டுவோம், மாநாட்டிற்கு அழைத்து ஊத்தி கொடுத்து பழக்குவோம். யோகா, உடல் ஆரோக்கியம் பேணுதல் எல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள், ஜாக்கிரதை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை