உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுள் பணியை மோடி செய்யட்டும்!

கடவுள் பணியை மோடி செய்யட்டும்!

'பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை; கடவுள் தான் அனுப்பி வைத்தார்' என, பிரதமர் மோடி பேசுகிறார். 21ம் நுாற்றாண்டில், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில், பிரதமர் மோடி இப்படி பேசினால், அவரை எப்படி விமர்சிப்பது?பிரதமர் மோடி, பா.ஜ.,வை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, எதையும் சொல்லலாம் என பேசுவது, ஒரு பித்தலாட்டம். அதை அரசியல் தெரிந்த ஒவ்வொருவரும் அறிவர். இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறையுடன் எப்போதும் இருக்க வேண்டிய பிரதமர், ஒடிசாவுக்கு சென்று, தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.தமிழகத்தில் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யாக இருப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களை நாங்கள் ஒருபோதும் விமர்சித்தது இல்லை. அப்படி செய்யவும் மாட்டோம். வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு செல்லும்போது, தமிழகத்தைச் சார்ந்த ராஜாஜியிடம் தான் கஜானா சாவியை கொடுத்தனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது, தமிழரைத் தான் வெள்ளைக்காரர் நம்பினர். பிரதமர் மோடியை கடவுள் அனுப்பி வைத்தார் என்றால், அவர் கடவுளிடமே செட்டிலாகட்டும். ஜூன் 4ம் தேதிக்கு பின் கடவுள் பணியை, பிரதமர் மோடி செய்யட்டும். - ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., அமைப்பு செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nayagam pillai
மே 25, 2024 12:33

உண்மையிலேயே அவர் உங்க எல்லாத்துக்கும் ஆப்பு


sankaranarayanan
மே 24, 2024 21:22

இவர்களுக்கு இப்போதுதான் இராஜாஜி வேண்டும் அவர் நல்லவர் அவர்கூறிய மதுவிலக்கை அமல் படுத்தவர்கள்தான் இவர்கள் அத்தகைப்பற்றி இவர்கள் பேசவே மாட்டார்களே


venkatakrishna
மே 24, 2024 15:16

ர்ஸ்பாரதி என்பவர் ரொம்ப நாட்களாகவே எதும் பேசவில்லையே, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்தேன் வாழ்க மோடிஜியைக்கண்டு பயந்தவர்கள் பலர் அதில் இவரும் ஒருவர் எல்லாம் ED பயம் தான்


சி சொர்ணரதி
மே 24, 2024 14:52

கடவுள் மறுப்பு கொள்கை ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ