உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம்: தடை செய்யப்பட்ட நாயை வளர்த்ததால் விபரீதம்

சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம்: தடை செய்யப்பட்ட நாயை வளர்த்ததால் விபரீதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது' என சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமின்றி ராட்வெய்லர் நாய் இனத்தை இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை வளர்க்கலாமா? என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ராட்வெய்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. பலத்த காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, 3 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5fks2pqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் எவை?

போயர்போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு, தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமிஷனர் விளக்கம்

இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது. ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இன்று காலை நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் யார் யாரெல்லாம் ராட்வெய்லர் நாய்களை வளர்க்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடக்கிறது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும். விசாரணைக்கு பிறகு கால்நடைத்துறையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

jayvee
மே 06, 2024 20:39

இத விட பெரிய வழக்குல மாட்டினாலே கட்சி பாத்துக்கும் இது சப்பை மேட்டர் மீறிப்போன நாய் மீது கேஸ் போட்டு குழப்பிடுவோம்


kumar
மே 06, 2024 17:55

ரயில் நிலையங்கள் , தெரு வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுற்றும் நாய்களை மாநகராட்சி அப்புறப்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும்


kumar
மே 06, 2024 17:55

ரயில் நிலையங்கள் , தெரு வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுற்றும் நாய்களை மாநகராட்சி அப்புறப்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும் இந்த நாய்களால் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்கு கேடு


R.Dhamo tharan
மே 06, 2024 23:25

அப்படியே இந்த மாதிரி மனித ஜென்மகளையும் அப்புறப்படுத்த வேண்டும்


S SRINIVASAN
மே 06, 2024 15:47

These dog owners should be punished like anything the growing dog menace is giving lot of problem to the general public this has to be dealt with the severe punishment I request Mr Radhakrishnan to take very severe action against those people who left the dog in the 1000 lights park. if any blue Blue cross activist telling about the dog menace then let them keep the dog in their house and love them, road users cannot be punished for those who grow the dogs and let it down on the street police and judiciary should give maximum punishment which are available under the law to these people


ஆரூர் ரங்
மே 06, 2024 15:35

நாட்டில் இது போன்ற நாய் வளர்ப்பு எதற்கு? ஒரு அன்னிய நாட்டு நாய் பராமரிக்கும் செலவில் பத்து ஏழைகளுக்கு சோறு போடலாம்.


vijai
மே 06, 2024 18:58

ஏழைகளுக்கு சோறு போட்டு இன்னும் பிச்சைக்காரனாக வச்சிருக்க சொல்றீங்களா


nsathasivan
மே 06, 2024 14:57

நாய் வளர்ப்பது தனிமனித உரிமை என்றாலும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வரை தான் ஏற்கனவே தெருநாய்களால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் தெருநாய்களை கட்டுப்படுத்தும் அரசின் கருத்தடை என்பது பெயரளவில் தான் செயல்படுகிறது புளுகிராஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் நாய்கள் மீது இரக்கம் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர்


Indian
மே 06, 2024 14:04

பெரும் பணக்காரன் தடை செய்யப்பட்ட நாயை வளர்ப்பதை ஒரு பேஷன் ஆ வைத்துள்ளார் ,,, கடும் வரி வசூலிக்க வேண்டும் அல்லது அதிக அபராதம் விதிக்க வேண்டும்


Sivagiri
மே 06, 2024 13:47

நாயை மேய்ப்பது இப்போ பேஷன் - - நாயை மேய்ப்பதால் ஒரு பிரயோஜனம் இல்லை - வியாதிதான் , பிரச்சினைதான் , , ஒரு ஆடு இல்ல பசு மாடு - கன்னுக்குட்டியில் இருந்து வளர்க்க ஆரம்பித்தால் , சில வருஷங்களில் நல்ல பால் கொடுக்கும் , அதுக்கு மேல் வளர்க்க நேரம் , இடம் , ஆள் வசதி இல்லை என்றாலும் , தொழிலாக வளர்ப்பவர்களிடம் விற்று விடலாம் - மகா புண்ணியம்


தமிழ்வேள்
மே 06, 2024 13:36

இந்த வகை தடை செய்யப்பட்ட நாய்கள் ஆவடி பகுதியிலும் அதிகம் காணப்படுகின்றன வளர்ப்பு நாய்களை வீட்டில் கட்டிவைக்கா விட்டால், அவை தெருவில் திரிவது கண்டறியப்பட்டால், உடனடியாக சுட்டுக்கொள்ளப்பட வேண்டும் கருணை, கத்தரிக்காய் எல்லாம் வேலைக்கு ஆகாது அப்படி எவனுக்காவது கருணை இருந்தால், இந்த மாதிரி நாய் கும்பலை அவனவன் வீட்டுக்குள் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கட்டும் தெருவுக்கு வர தேவையில்லை


sridhar
மே 06, 2024 13:23

தெருவுக்கு தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது அதன் மேல் கருணை காட்டும் இயக்கங்களில் உள்ளவர்கள் யாரும் தெருவில் நடந்து செல்லும் வர்கம் அல்ல அவர்களுக்கு சாதாரண மக்கள் அவஸ்தை புரியாது அரசாங்கமோ நீண்ட தூக்கத்தில் இருக்கிறது நாம் தான் அறிவோடு வாக்களிக்க வேண்டும் நாய்கள் விஷயத்தில் ஜீவ காருண்யம் பேசும் மக்கள் ஆடு மாடு கோழி இவற்றை வெட்டி சாப்பிட தயங்குவதில்லை என்ன நியாயமோ


R.Dhamo tharan
மே 06, 2024 23:26

வீட்டிலேயே இருங்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ