உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 டன் ரேஷன் அரிசி கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

15 டன் ரேஷன் அரிசி கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

தென்காசி: கேரளாவுக்கு கோழி இறைச்சி கொண்டு சென்ற லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் தப்பி ஓடினார்.தென்காசி அருகே ஆசாத் நகரில் குற்றாலம் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். மதுரை பதிவெண் கொண்ட ஒரு லாரியில் கோழி இறைச்சிகள் இருந்தன. போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் அதன் உட்பகுதியில் 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அரிசி மூட்டைகளை குற்றாலம் கலைவாணர் அரங்கில் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 03, 2024 07:49

பாசாங்கு செய்யும் விதத்தில் ரேஷன் அரிசியை அரிதினும் அரிதாக பறிமுதல் செய்கின்றனர்.ஆனால் எங்கிருந்து கடத்தப்படுகிறது என்ற உண்மையை மட்டும் வெளிக்கொணருவது இல்லை.காரணம் அவ்வாறு கொண்டு வந்துவிட்டால் கடத்தல் பேர்வழிகள் கப்பம் கட்டுவது நின்றுவிடும் என்பதால்.


முக்கிய வீடியோ