உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை - கோவைக்கு பறந்த இதயம்

மதுரை - கோவைக்கு பறந்த இதயம்

திருப்பூர்:மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், நோயாளி ஒருவருக்கு பொருத்துவதற்காக, மதுரையில் இருந்து கோவைக்கு, 2 மணி, 45 நிமிடங்களில் எடுத்து வரப்பட்டது.மதுரையில், மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க, குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது இதயம் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அனுமதித்துள்ள நோயாளிகளில் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=24onbg8x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து காலை 10:30 மணிக்கு, இதயத்துடன் ஆம்புலன்ஸ் கிளம்பியது. காரில் மருத்துவக் குழுவினர் சென்றனர்.மதுரை, திண்டுக்கல், திருப்பூர் என, மூன்று மாவட்டங்களைக் கடந்து, கோவைக்கு மதியம், 1:15 மணிக்கு, அதாவது 2 மணி, 45 நிமிட நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது.முன்னதாக, திருப்பூர் மாவட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தவுடன், தாராபுரம், குண்டடம், பல்லடம், காரணம்பேட்டை போன்ற இடங்களில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே இந்த ஆம்புலன்ஸ் பயணம் பெரிய சவாலாக இருந்தது.மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் பிரதீப், சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், 'மூளைச்சாவு அடைந்தவரின் உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தன.'அவரது குடும்பத்தினரின் நல்ல மனம் காரணமாக, உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவையில், மூன்று வாரங்களாக இதயம் செயலிழந்து, உயிருக்குப் போராடி வந்த நோயாளிக்கு மாற்று இதயம் பொருத்தப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழன்
பிப் 27, 2025 15:09

மிகவும் பாராட்டுக்குரியது அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் இதயம் பொருத்திய நபர் குணமடைந்து நலமுடன் வாழ வேண்டும்


புதிய வீடியோ