உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / -சம்பள உயர்வு வழங்காததால் ரூ.6 லட்சம் திருடியவர் கைது

-சம்பள உயர்வு வழங்காததால் ரூ.6 லட்சம் திருடியவர் கைது

புதுடில்லி,:சம்பள உயர்வு கோரிக்கையை, பைக் ஷோரூம் உரிமையாளர் நிராகரித்ததால், 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த இரண்டு கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.டில்லி மாநகரப் போலீசின் மேற்கு மாவட்ட துணை கமிஷனர் விசித்ரா வீர் கூறியதாவது:மேற்கு டில்லி நரைனாவில் உள்ள பைக் ஷோரூமில் டிச., 31ம் தேதி, 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போனது.ஷோரூம் மற்றும் அந்தப் பகுதியில் இருந்த​நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தோம். ஷோரூம் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஊழியர் கான் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஓராண்டாக அங்கு தொழில்நுட்ப ஊழியரான கான்,20, பணம் மற்றும் பொருட்களை திருடும்போது, தன் திறமையை பயன்படுத்தி மின்சார தடை ஏற்படுத்தி இருந்தார். மேலும் ஹெல்மெட் அணிந்து திருடியுள்ளார். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சம்பள உயர்வு கேட்டதை, உரிமையாளர் நிராகரித்ததால் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த இரண்டு கேமராக்களை பறிமுதல் செய்தோம். மற்ற பொருட்களை மீட்கும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ