உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏலம் விடப்படும் எம்.பி.பி.எஸ்., இடங்கள்!

ஏலம் விடப்படும் எம்.பி.பி.எஸ்., இடங்கள்!

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் அறிவிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைகள், எம்.பி.பி.எஸ்., இடங்களை ஏலம் விடத் துவங்கியுள்ளன. இந்த ஆண்டு நடந்த 'நீட்' தேர்வு செல்லுமா என்பது தீர்மானிக்கப்படாத நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.மேலும், 'முன்தொகை செலுத்தும் மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டண சலுகை, நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் போதும்' என, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 'நீட்' தேர்வில், 500 மதிப்பெண் எடுத்தாலும், பணம் இல்லாதவர்களால் தனியார் பல்கலைகளில் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படிக்க முடியாது. அதேநேரம், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும், பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இது சமூக அநீதி. மருத்துவக் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு, இனியும் தொடரக் கூடாது. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.அன்புமணி,தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karutthu
ஜூலை 11, 2024 18:30

அன்புமணி அவர்கள் வாய் திறந்து விட்டாரா ......இனி நீட் தேவையில்லை ? ஒருவேளை அன்புமணி அவர்கள் மருத்துவ கல்லூரி ஏதாவது நடந்து கிராரோ ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை