உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தந்தையை வெட்டிக் கொன்றார்

மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தந்தையை வெட்டிக் கொன்றார்

பரங்கிப்பேட்டை : கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆணையாங்குப்பம், புதுத்தெருவைச் சேர்ந்தவர் பூராசாமி, 70; இவரது மகன் மகேஷ், 35; மனநலம் பாதிக்கப்பட்டவர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று, 'சமையல் சரியில்லை' என, தந்தை பூராசாமியிடம் மகேஷ் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த மகேஷ், வீட்டில் இருந்த கத்தியால் பூராசாமியின் கழுத்தில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் பூராசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் பூராசாமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மகேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ