உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி ஒதுக்க முடியாது மிரட்டும் அமைச்சர்கள்

நிதி ஒதுக்க முடியாது மிரட்டும் அமைச்சர்கள்

தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதால், இடைத்தேர்தலில் தோல்வி ஏற்படும் என தி.மு.க., அஞ்சுகிறது. அதனால் தான், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது. அன்புமணி பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக, தி.மு.க., அலுவலகத்தில் அடைத்து வைக்கின்றனர். பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் நுாறு நாள் வேலை திட்ட பணிகள் வழங்க மாட்டோம்; ஊராட்சிக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என, அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். இத்தனை அத்துமீறல்களையும் தாண்டி பா.ம.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., - பா.ம.க.,விற்கு பொது எதிரி தி.மு.க., தான். எனவே, அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை வீணாக்காமல், இடைத்தேர்தலில் பா.ம.க.,விற்கு ஆதரவு தர வேண்டும். ராமதாஸ்,நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை