உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது விபரீதம்; மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி

லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது விபரீதம்; மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதியில் லேப்டாப்பிற்கு, 'சார்ஜ்' போடும் போது, மின்சாரம் தாக்கியதில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்தார்.நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரணிதா, 32. இவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் உதயகுமார் என்பவருக்கும், 2016ல் திருமணமானது. எம்.டி., மருத்துவ படிப்பின் இறுதியாண்டை முடித்த சரணிதா, அயனாவரத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 25 நாட்கள் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, உணவு அருந்திவிட்டு விடுதி அறையில் இருந்தார். மதியம் கணவர் உதயகுமார், மனைவிக்கு பல முறை போன் செய்தும் அவர் எடுக்காமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த உதயகுமார், விடுதியின் அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு, சரணிதாவை அழைக்குமாறு கூறியுள்ளார். அப்போது, சரணிதா அறைக்கு சென்ற ஊழியர்கள், பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு, 'லேப்டாப்' சார்ஜர் ஒயரை பிடித்தபடி, சரணிதா கீழே கிடந்தார். உடலில் உயிர் இல்லை, அவர் கை கருகியிருந்தது. தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், லேப்டாப்புக்கு சார்ஜர் போடும் போது, மின்சாரம் தாக்கியதில் சரணிதா உயிரிழந்தது தெரிவந்தது. இதுகுறித்து, அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
மே 28, 2024 12:08

கையில் ஒயரை பிடித்தபடி உயிர் இழந்திருக்கிறார் என்ற செய்திப்படி அந்த ஒயர் சரியான தரமானதாக இல்லாததால் வெளிப்புறம் உள்ள ஒயர் பிரிந்திருக்கும் , அதனால் உள்ளே இருக்கும் மின்கடத்தி ஒயர் கையில் மின்சாரம் தங்கியிருக்கும். மேலும் அந்த அளவுக்கு ஷாக் அடிக்க வாய்ப்பே இல்லை. அடுத்த நிமிடம் நம் கைகள் உதறும் அப்போதே நம்மை அறியாமலேயே நாமே கையை எடுக்க வைத்திருக்கும் . செய்தி மனதை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது . கவனத்துடன் செயல்பட்டிருந்தால் தவிர்த்திருக்கலாமோ ? வந்தே மாதரம்


Dr.R.Raveenthiranaath Nehru Ph.D.
மே 28, 2024 11:34

மின்சாரம் லீக் ஆகும்போது தானாகவே மின்சார இணைப்பை துண்டிக்கும் சாதனம் பொருத்தாமல் இருந்த விடுதியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எல்லா விடுதிகளிலும் கட்டாயம் உடனே அமுல்படுத்த வேண்டும். ஆழ்ந்த இரங்கல் .


The Mechanic
மே 28, 2024 10:28

அனைத்து இடங்களிலும் ஆர்சிசிபி அல்லது ஈஎல்சிபி பொருத்தியிருக்க வேண்டும், ஆனால் அலட்சியம் .. மற்றும் படித்தவர்கள் வாழ்க்கை பயன்பாட்டிற்கான அறிவை வளர்த்து கொள்வதில்லை (common IQ) … Rest in peace!!


Ashanmugam
மே 28, 2024 09:42

வாழ்க்கையில் ஒரு பெண் மருத்துவ உயர் படிப்பு படித்து பட்டம் பெறுவது உண்மையிலே பூர்வ ஜென்ம புண்ணியம். இந்த சூழ்நிலையில் இந்த மருத்துவ புத்திசாலி பெண்மணி எதிர்பாரத விதமாக லேப்டாப் ஒயர் மின்கசிவு ஷாக்கில் இறந்த செய்தி படிப்பவர்களின் கண்களை குளமாகிவிடும். இன்றைய சமுதாயத்தில் மருத்துவர்களின் பணி மகத்தான பணியாக மக்கள் கருதுகின்றனர். இத்தருணத்தில் இந்த மருத்துவ பெண்மணி பல அறிய பெரிய சாதனைகளை படைக்க வேண்டிய நேரத்தில் மரணம் எய்தியது, நாட்டு மக்களுக்கே பேரிழிழைப்பாகும். பிரிவால் வாடும் கனவன் பெற்றோர் உடன் பிறந்தோருக்கு ஆறுதல் சொல்லமுடியாத நிலையில் இறைவன்தான் ஆறுதல் சொல்லவேண்டும். நல்லவங்களுக்கா இந்த துயரமான சம்பவம் நடக்கவேண்டும்? அட கடவுளே மனசு பத பதைக்கிறது. ஆறுதல் சொல்ல நெஞ்சில் ஈரமில்லை. அகால மரணம் அடைந்த மருத்துவ டாக்டரின் புண்ணிய ஆன்ம என்றென்றும் இறைவன் நிழலில் இளைப்பாற சர்வ வல்லமை படைத்த இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி.


duruvasar
மே 28, 2024 08:19

என்ன கொடுமை நெஞ்சம் பொறுக்கவில்லை. ஆத்மா சாந்தியடையட்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி