உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வாரிய ஓய்வூதியதாரர் பயன்பெற மொபைல் செயலி

மின்வாரிய ஓய்வூதியதாரர் பயன்பெற மொபைல் செயலி

சென்னை:தமிழக மின்வாரியத்தில், பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து, 90,000க்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்க, மாதம் சராசரியாக, 300 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் தங்களின் வாழ்நாள் சான்றை, நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.வயது முதிர்ந்தவர்களின் சிரமத்தைப் போக்க, 'TNEB PENSIONER MOBILE APP' என்ற மொபைல் போன் செயலியை, மின்வாரியம் உருவாக்கிஉள்ளது. அந்த செயலியை ஓய்வூதியதாரர்கள் தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தபின், ஓய்வூதிய ஆணை எண், வங்கி கணக்கு எண்ணை பதிவிட்டு, செயலியின் சேவைக்கு செல்லலாம்.அந்த செயலியில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஓய்வூதிய தொகை, ஆண்டு மொத்த ஓய்வூதிய அறிக்கையை பெற முடியும். இது, வருமான வரி தாக்கல் செய்ய உதவியாக இருக்கும். செயலியில் விரல் ரேகை பதிவு செய்து, வாழ்நாள் சான்றையும் பதிவேற்றம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்