உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை தேர்தலை விட கூடுதல் பயணியர் அரசு பஸ்களில் 2 நாட்களில் பயணம்

சட்டசபை தேர்தலை விட கூடுதல் பயணியர் அரசு பஸ்களில் 2 நாட்களில் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த சட்டசபை தேர்தலுக்கு, சென்னையில் இருந்து வெளியூர் சென்ற பயணியரை விட, இம்முறை 1.48 லட்சம் பயணியர் கூடுதலாக பயணித்துள்ளனர். கடந்த 17, 18ம் தேதிகளில், 4.03 லட்சம் பயணியர் வெளியூர் சென்றுள்ளனர்.லோக்சபா தேர்தலையொட்டி, சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் இதர நகரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள், 807 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் 2,899 பஸ்கள் கடந்த 17ம் தேதி இயக்கப்பட்டன. இவற்றில், 1.48 லட்சம் பயணியர் பயணம் செய்தனர்.நேற்று முன்தினம், 4,400 பஸ்களில் 2.55 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இரண்டு நாட்களில், 7,299 பஸ்களில் 4.03 லட்சம் பேர் பயணித்துள்ளனர். சென்னையிலிருந்து 17, 18ம் தேதிகளில், 31,532 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய நாள், சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3,353 பஸ்களில் சென்ற 1.36 லட்சம் பேரை விட, இம்முறை 1.48 லட்சம் பயணியர் கூடுதலாக பயணித்துள்ளனர். கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது, ஒரே நாளில் அதிகபட்சமாக இயக்கிய பஸ்கள் மற்றும் பயணம் செய்தவர்களை விட, தற்போது கூடுதல் எண்ணிக்கையில் பயணித்து உள்ளனர். மேலும் பயணியர் வசதிக்காக, தமிழக அரசின் வேண்டுகோள்படி, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கும், கூடுதல் ரயில்கள் மற்றும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
ஏப் 20, 2024 15:00

விழளுக்கு யிறைத்த நீர் அடாவடி திருட்டு கட்சி பல தில்லு முல்லை செய்திருக்கிறது


Balasubramanian
ஏப் 20, 2024 12:29

எனக்கு தெரிந்த சில 35 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்! அவர்கள் இல்லாத நிலையில் அவர்கள் வீட்டு முதியவர்கள் வெயிலில் வெளியே சென்று வாக்களிக்க சுணக்கம் காட்டி வீட்டில் முடங்கி கிடந்து உள்ளனர்! இதுதான் நன்கு சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தினர் நாட்டுக்கு தரும் மரியாதை


Kasimani Baskaran
ஏப் 20, 2024 07:52

தேர்தல் திருவிழாவில் பலர் பங்கேற்றார்களா அல்லது விடுமுறை என்பதால் கூடுதலாக ஒரு நாள் என்று ஊருக்குப்போனார்களா என்பது தேர்தல் முடிவில்த்தான் தெரியும்


ديفيد رافائيل
ஏப் 20, 2024 12:45

கூடுதலாக ஒரு நாள் leave தான் நான் ஓட்டு போடல Special bus ல travel பண்ணதுல நானும் ஒருவன்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை