உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல நல்ல தீர்வு வரும்: நயினார் நாகேந்திரன்

புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல நல்ல தீர்வு வரும்: நயினார் நாகேந்திரன்

சென்னை: 'தேர்தலுக்கு இன்னும் 5,6 மாதங்கள் உள்ளன. கூட்டணியில் கடைசி நிமிடத்திலும் மாற்றம் வரலாம். புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல, பிரச்னைக்குப் பிறகு நல்ல தீர்வு கிடைக்கும்' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பாஜ என்றைக்கும் அடுத்த கட்சி பிரச்னையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. நல்லதுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். கூட்டணி கட்சித் தலைவர் சந்தித்து பேசலாம். இபிஎஸ்யும், அமித்ஷாவும் சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. செங்கோட்டையன் அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அவர்கள் உட்கட்சி பிரச்னை. அதனை பொதுச்செயலாளர் இபிஎஸ் பார்த்துக் கொள்வார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xelj1jvs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கடைசி நேரத்தில்...!

தேர்தலுக்கு இன்னும் 5, 6 மாதங்கள் உள்ளன. கூட்டணியில் கடைசி நிமிடத்திலும் மாற்றம் வரலாம். புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல, பிரச்னைக்குப் பிறகு நல்ல தீர்வு கிடைக்கும். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால், தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டால் தான், அதாவது இரட்டை இஞ்ஜின் சர்க்கார் இருந்தால்தான் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

நிறைய திட்டங்கள்

அந்த வகையில் அன்று இருந்த முதல்வர் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பிரதமர் மோடியுடன் இணைந்து பேசி நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். ரூ.40 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் சாலை திட்டங்கள், வந்தே பாரத் ரயில்கள் என எல்லா திட்டங்களும் கொண்டு வந்தார்கள். இபிஎஸ் முதல்வராக வர அமித்ஷா சொன்னால், நிச்சயம் பிரசாரம் செய்வேன் என ஏற்கனவே தினகரன் கூறியிருந்தார். இப்போது ஏன் மாற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. பசும்பொன் தேவர் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

bharathi
செப் 18, 2025 08:52

unfit to lead BJP in TN we need Annamalai back


Anantharaman Srinivasan
செப் 17, 2025 23:28

நயினா.. முதல்ல சரியா பேச கத்துக்கோங்க. அல்லது ஸ்டாலின் போல துண்டு சீட்டு வச்சுகோங்க. புயலுக்குப்பின் சேதம் தான் தெரிஞ்சுகோங்க.


viki raman
செப் 17, 2025 22:13

இவர் தான் பிஜேபி தலைவர் கடைசி வரை.


SUBBU,MADURAI
செப் 17, 2025 21:24

இந்த ஆள் திராவிடக் கட்சியில் இருந்து வந்தவர் இவர் தலைமையில் தேசியக் கட்சியான பாஜக தமிழகத்தில் ஒரு போதும் வளர வாய்ப்பில்லை!


K V Ramadoss
செப் 17, 2025 20:52

புயலுக்குப் பின்னே அமைதி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்..


Iniyan
செப் 17, 2025 19:33

இந்த மாதிரி ஆட்களை வைத்து கொண்டு தாமரை மலர்வது கனவிலும் நடவாது.


Venugopal S
செப் 17, 2025 18:53

என்று, எங்கு புயலுக்கு பின் அமுதமழை பொழிந்து இருக்கிறது? ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக் கூடாது!


கல்யாணராமன்
செப் 17, 2025 18:44

புயலுக்கு பின்னே அமைதி இதுதான் இயற்கையின் நியதி


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 17, 2025 18:29

அரசியல் அறிவு குறைவான இந்த மனிதரை தானாக முன்வந்து தனது பதவியை வேண்டாம் என்று சொல்ல விட்டு, மிக தகுதி வாய்ந்த அரசியல் அறிவு கொண்ட திரு அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகா கொண்டு வர இவர் முயற்சி செய்ய வேண்டும்.இது தான் நமது நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கு இவர் செய்யும் நன்றி கடனாக இருக்கும்.


vijay
செப் 17, 2025 18:24

அதிமுககாரன் கூட இப்படி பேச யோசிப்பான் ....ஆனா சொந்த கட்சியில ஆயிரம் பிரச்னைகள் அதில எதுவும் கவனம் செலுத்தாமல் வாய் மூடி மௌனம் ஆகி விடுகிறார் . இப்படி போனால் , பிஜேபி இனி தமிழகத்தில் வளர்ந்த மாதிரி தான் .தலைவர் அவர்களுக்கு ஒரே ஒரூ வேண்டுகோள் , திரும்பவும் பிஜேபி யை நோட்டாவுக்கு கீழே கொண்டு போய் விடாதீர்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை