தேசியம் பேட்டி
அரசியலில் ஓய்வு கிடையாது!அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஓய்வு வயது என ஒன்று கிடையாது என்பதை நம்புகிறேன். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள், மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கடைசி மூச்சு வரை அதைச் செய்ய வேண்டும்.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்நாட்டை இழிவுபடுத்தும் ராகுல்!வெளிநாட்டில், சொந்த நாடு குறித்து விமர்சிப்பது தேசப்பற்று கிடையாது. அமெரிக்காவில் பா.ஜ., அரசை மட்டுமல்ல தேர்தல் கமிஷனையும் ராகுல் விமர்சித்துள்ளார். தொடர் தோல்வியால் விரக்தியடைந்துள்ள அவர், வெளிநாட்டுக்குச் சென்று சொந்த நாட்டை இழிவுபடுத்துகிறார்.சிவ்ராஜ் சிங் சவுகான்மத்திய அமைச்சர், பா.ஜ.,காங்., நாடகம் அம்பலம்!நாடு நல்ல நிலையை எட்டும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று ராகுல் பேசியுள்ளார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற கோரிக்கையை வைத்து ஆட்சிக்கு வர கனவு காணும் அவரது நாடகம் அம்பலமாகியுள்ளது. இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே காங்கிரசின் சதித்திட்டம்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்