உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூரில் பதுங்கியிருந்த நக்சலைட் கைது

ஓசூரில் பதுங்கியிருந்த நக்சலைட் கைது

சென்னை: ஓசூரில் பதுங்கி இருந்த, நக்சல் சந்தோஷ்குமாரை, தமிழக போலீசார் உதவியுடன், கேரளா நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.தமிழக - கேரள மாநில எல்லைக்கு அருகேயுள்ள, வயநாடு, மலப்புரம், கண்ணுார், பாலக்காடு வனப்பகுதிகளில் ஊடுருவி உள்ள நக்சலைட்கள், மானந்தவாடியில் ரோந்து போலீசார் மீது தாக்குதல், முக்காலி வனச்சரகர் அலுவலகம் சூறை, பாலக்காட்டில் கே.எப்.சி., உணவகம், கல் குவாரிகள் மீது தாக்குதல் என,வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கும்பலுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவு அளிப்பதும் வழிநடத்துவதும் தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோகுமார், 45. இவர், 2014ல் வீட்டை விட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றி வந்தார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர்களான சி.பி.மொய்தீன், சோமன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.மேலும், கேரளாவின் கபினி தள நக்சல் இயக்க தலைவராகவும் இருந்தார். இவர் மீது, தமிழகம் மற்றும் கேரளாவில், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், இவரை பற்றி தகவல் சொன்னால், 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அறிவித்திருந்தது.இந்நிலையில், ஓசூர் பகுதியில் மறைந்திருந்த நக்சல் சந்தோஷை, தமிழக போலீசார் உதவியுடன், கேரள மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Yes your honor
பிப் 23, 2025 11:49

இவர் பெங்களூருவோ அல்லது மைசூருவோ செல்லலாம் என்று தான் ஓசூரு வரை வந்திருப்பார். பிறகுதான் தமிழக போலிஸைப் பற்றி இவருக்கு ஞாபகம் வந்திருக்கும். தமிழக போலிஸ் பிஜேபி காரர்களைத்தான் கைதுசெய்யும், நம்மைப் போன்ற நக்சல்கள், சார்கள், வழிப்பறி செய்பவர்கள், கொலை செய்பவர்களை எல்லாம் ஒன்றும் செய்யாது, தழகமும், தமிழ் போலீசும் தான் நமக்கெல்லாம் சேப்ட்டி நினைத்திருப்பார். ஒசூரிலேயே தங்கிவிட்டார். இப்பொழுது கூட பாருங்கள், கேரளா போலீஸ் தான் வந்து கைது செய்துள்ளது, நமது ஸ்காட்லாந்த்து உளவுத்துறைக்கு ஒன்றும் தெரியவில்லை,


Jayakumar Jayakumar
பிப் 23, 2025 11:16

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் வணக்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை