செய்திகள் சில வரிகளில்
வனத்துறையில் விலங்குகள் பாதுகாப்புக்காக, எட்டு கால்நடை உதவி மருத்துவர், ஆறு கால்நடை ஆய்வாளர்கள், ஒன்பது கால்நடை உதவியாளர் என மொத்தம், 23 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சேலம், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றில், இப்புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.