உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு இல்லை: தி.மு.க., எம்.எல்.ஏக்கள் விளக்கம்

கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு இல்லை: தி.மு.க., எம்.எல்.ஏக்கள் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளச்சாராயம் விற்பனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தி.மு.க., எம்.எல்.ஏக்கள் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.கள்ளச்சாராயம் மரணங்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் காரணம் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன் ( ரிஷிவந்தியம்), உதய சூரியன் (சங்கராபுரம்) உள்ளிட்டோர் கூட்டாக நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தோல்வியின் விரக்தியால் பேசி வருகிறார் ராமதாஸ். அவர் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி அரசியலில் இருந்து விலகத் தயாரா?.

வீண் குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் விவகாரத்தில் அதிகாரிகளை கூண்டோடு முதல்வர் ஸ்டாலின் மாற்றி உள்ளார். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட ராமதாஸ் முயற்சி செய்கிறார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உடனடி சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்தோம். அரசியல் ஆதாயத்திற்காக எங்கள் மீது வீண் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள். அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளோம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்குள்ளான 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்பட்டமான பொய்

இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இல்லாத குற்றச்சாட்டை தெரிவித்து சட்டசபையை முடக்க இ.பி.எஸ்., முயற்சி செய்கிறார். கள்ளச்சாராயத்தை அனுமதிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. பேச வாய்ப்பு தரவில்லை என பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் அதிமுகவினர் சட்சபையில் அமளியில் ஈடுபடுகின்றனர். அமளியில் ஈடுபட்டாலும் அவையில் தொடர்ந்து பங்கேற்க அதிமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சி.பி.ஐ., விசாரணை எதற்கு?

சிபிசிஐடி, ஒரு நபர் குழு விசாரணையை உடனடியாக துவங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் புறக்கணித்ததால் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என காத்திருக்கின்றனர். சி.பி.ஐ., விசாரணை எதற்கு?. அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாரய உயிரிழப்பை சிபிஐ விசாரித்ததா?. திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை. கள்ளுக்கடை திறக்கும் அவசியம் தற்போது எழவில்லை. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

DARMHAR/ D.M.Reddy
ஜூன் 26, 2024 00:04

அரசியல் பிழைப்புக்காக முழு பொய்தனை சொல்ல வேண்டாம்.


D.Ambujavalli
ஜூன் 25, 2024 16:44

தங்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல், இவர்கள் சட்டமன்றத்துக்கு attendance கொடுத்து, சம்பளம் படி, contract, கமிஷன் வாங்க மட்டும்தான் இருக்கிறார்களா ?


rama adhavan
ஜூன் 24, 2024 22:12

பேப்பர் கிராம ஏழை படிப்பது இல்லை. டீ, சலூன், மளிகை கடைகளில் இவைகளின் உபயோகமே வேறு. எல்லோரும் டீவீ தான் பார்க்கிறார்கள். அதனால் தான் இதுபோன்ற பேட்டி. முதலில் 24 மணி செய்தி சேனல்களை ஒழிக்க வேண்டும். திரும்ப திரும்ப பொய் செய்திகள் இவற்றின் மூலம் தான் திணிக்கப் படுகின்றன. ஒரு நாளைக்கு 6 மணிக்கு 1 முறை 15 நிமிடங்கள் மட்டும் செய்தி வர வேண்டும். எல்லா டீவீ யும் இரவு 10 மணிக்கு மேல் மூட வேண்டும். காலை 6மணிக்குதான் திறக்க வேண்டும். அதுபோலவே யூ டூபும்.


vijay
ஜூன் 24, 2024 16:21

மொத்த கூட்டமும் பொய்கள் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாங்க, இல்லாட்டி வேற ஏதாச்சும் பிரச்சினைகளை வைத்து, தமிழ்நாட்டுக்கே பொருத்தமில்லாத பிரச்சினைகளை வச்சு திசை திருப்பும் வேலைதான் பார்க்கிறாங்க.


K V Ramadoss
ஜூன் 23, 2024 19:22

இனி கள்ளச்சாராய சம்பவமோ மரணமோ ஏற்படாது. அப்படிஏற்பட்டால் நாங்கள் ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து விளகிவிடுவோம் என்று உறுதி மொழி கூறமுடியுமா ?


Rajagopalan R
ஜூன் 23, 2024 19:10

Give automatic permission to ruling party MLAs councilors panchayat president etc to own, vend, run Tasmak shop and bars. Then they will not allow any illicit liquor in their area. 2. Install automatic vending machine AVM in all areas which should vend liquor for as low as 10/20 rupees like petrol bunk so poor who do not own money to buy bottles can use this facility and that too available 24/7


RajK
ஜூன் 23, 2024 12:40

பெரும்பான்மையான மக்கள் மூடர்கூடத்தினாராக இருக்கும் பொழுது என்ன அறிக்கை விட்டாலும் கேட்டுக் கொள்வார்கள். இந்த கலாச்சாராயத்தை விற்றவர்கள் போலீசும் கலெக்டரும் மட்டும் தானா? அவர்களை இடமாற்றம் செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா? அரசியல்வாதி ஒருவருக்கும் இதில் பங்கு இல்லையா? மாவட்டச் செயலாளருக்கு பங்கு கொடுக்காமல் திராவிட மாடலில் ஒருவன் கள்ளச்சாராயம் அல்லது போதைப் பொருட்களை விற்க முடியுமா?


Ramanujan
ஜூன் 23, 2024 11:22

ஒரு கலெக்டர் பத்திரிகை பேட்டி கொடுக்கும்போது இவருக்கு என்ன வேலை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ? சொன்னதை சொல் என்கிறாரா?


Mani . V
ஜூன் 23, 2024 07:59

இப்படி வாய் கூசாம பொய் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இருக்குமா? இருக்காதா? எது வெட்கமா? அப்படின்னா என்னாங்கோ?


PARTHASARATHI J S
ஜூன் 23, 2024 07:28

மக்களின் அறியாமையை கட்சிக்காரன்கள் காசு ஆக்குகிறான். பூலோக நரகம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை