உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கடமையை செய்யாததே சாராய மரணத்திற்கு காரணம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தகவல் 

அரசு கடமையை செய்யாததே சாராய மரணத்திற்கு காரணம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தகவல் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம்,'' என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வீடுகளுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று நேரில் சென்று விசாரித்தார்.முன்னதாக, கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தார்.அப்போது, அவர் கூறியதாவது:கள்ளக்குறிச்சி பகுதியில் பல காலமாக கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது; அரசும், காவல் துறையும் தடுக்கவில்லை. இந்த சம்பவத்தின் குற்றவாளி, எந்த அரசியல் கட்சியில் தொடர்பில் இருந்தாலும் அவர் குற்றவாளி தான். இது குறித்த அறிக்கை பிரதமரிடம் அளிக்கப்பட்டு, உரிய நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழக அரசு விழிப்புணர்வு இல்லாமல், தன் கடமையை சரிவர செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய காவல் துறை டி.எஸ்.பி., ஷன்மித் கவுர், துணை இயக்குனர் தினேஷ் வியாஸ், உறுப்பினர்கள் வட்டேப்பள்ளி ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Thiunniyam Dewakar
ஜூன் 27, 2024 12:48

அரசாங்கம் எல்லாம் தெரிந்து மக்கள் தொகயை குறைக்க செய்த செயல் இது. நன்று


MADHAVAN
ஜூன் 27, 2024 11:05

2023 ல குஜராத்துல கள்ளச்சாராயம் குடிச்சு 63 பேரு செத்துபோனாங்க, அப்போ என்ன பண்ணுனீங்க னு சொல்லுங்க, கள்ளச்சாராயம் குடிச்சா சாவுவரும் னு தெரிஞ்சு குடிச்ச குடிகாரப்பயலுகளுக்கு இவன் வக்காலத்து


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 11:56

குஜராத் ரொம்ப பின்தங்கிய மாநிலம்ங்க ....அங்கெல்லாம் படிப்பறிவு பட்டறிவு என்று எதுவுமே கிடையாது ....தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ...இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் ...அதிக வரி செலுத்தும் மாநிலம் ...ராமசாமி மண் இது


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 12:51

இதை நீ.... உங்கள் தலைவரிடம் சொல்.... அவர் தான் குடிச்சி செத்தால் 10 லட்சம் என்று மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கி வருகிறார்


Sampath Kumar
ஜூன் 27, 2024 10:26

கடமையை சரியாய் செய்யாததால் தான் சாராய சாவிற்கு காரணமாம் பெரிய கண்டு பிடிப்பு என்ன பண்ணவேண்டும் என்று நினைக்கிறாய் வீடு வீட பொய் யாரு சாராயம் காச்சுகின்றன என்று கண்ணக்கு ஏடாக சொல்லகிரையா ?/ முதல ஒண்ணுப்பான்னு உங்க கிட்ட வெட்டியா ஒரு கும்பல் குச்சியை வச்சுக்கிட்டு சும்மா ஊரு சுற்றிக்கிட்டு கிட்ணக்கானுக பாரு அந்த கும்பலை இந்த வேலையை பார்க்க சொல்லும் புனியமாவது கிடைக்கும் அதை விட்டு விட்டு சும்மா உதார் விட்டுகிட்டு அலைகிறது செய்ய சொல்லு பார்க்கலாம் போவியா


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 10:56

இறந்தவர் எண்ணிக்கை அறுபதுக்கு மேலே போகிறதாம்.. இவ்வளவு நடந்தும் மக்கள் இன்னமும் கள்ள சாராயம் குடிக்கிறார்கள். இந்த மரணங்களை தீர்க்க விடியல் உடனடியாக சமூக நீதி சாராயத்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் ..இந்த சமூக நீதி சாராயத்தை மத சார்பின்மையாக அனைவருக்கும் கொடுத்தால் ஒரே நாளில் கள்ள சாராயம் ஒழிந்து விடும் ....


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 10:26

உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்தது என்கிறார்கள். கழக மாமூல் வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்பதால் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருப்பார்கள். காவல்நிலையத்திற்கு மிக அருகில் விற்பனை நடந்துள்ளதால் இத்தகைய அனுமானத்திற்கு வரவேண்டியுள்ளது


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 27, 2024 09:41

இப்படி அரசு கடமையை செய்யவில்லை என்று சொல்லி சாதாரணமாக கடந்து போகிறோம். ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை யாரும் பார்ப்பதில்லை. அநியாயமாக 60க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. முதல்வரின் குடும்பத்திலோ மற்ற அரசியல்வாதிகளின் குடும்பத்திலோ இது போன்ற இழப்புகள் ஏற்பட்டிருந்தால் அதன் வலி தெரிந்திருக்கும். மற்றவர்களை குடிக்க வைத்து அதன் மூலம் ஆட்சி நடத்துவதற்கு அதில் பேசாமல் குடும்பத்தோடு பிச்சை எடுக்கலாம்.


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 10:01

சாதாரணமாக கடந்து போக காரணம் அந்த அளவுக்கு திராவிடனுங்க இங்கு மக்களை மூளை சலவை செய்துள்ளார்கள்.. சாராய ஆலை அதிபர்களை மந்திரிகளாக தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் நடக்கும் . அதை மக்களுக்கு யார் உணர்த்துவது? மக்களுக்கு கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை தேர்தலில் தோற்கடித்த நாடு இது ....கள்ளுண்ணாமை எழுதிய வள்ளுவனுக்கு சிலை வைத்து சாராய வியாபாரம் செய்கிறார்கள் ..


duruvasar
ஜூன் 27, 2024 09:34

இதுதான் திராவிட மாடல். வாயில் வடை சுடுவதில் பலே கெட்டிக்காரர்கள்.


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 08:36

கடமையை செய்யாத அரசு இருந்து என்ன பயன் ???


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 07:49

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர், ஆணைய காவல் துறை டி.எஸ்.பி., துணை இயக்குனர் என்று வடக்கன் எல்லாம் இங்கே வந்து விசாரிக்கிறாங்க. தமிழ் நாடு என்ன சாதாரண மாநிலமா.. படித்து முன்னேறிய ஐரோப்பா மாநிலம் தமிழ் நாடு .. இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம்.. அதிக வரி செலுத்தும் மாநிலம்.. ராமசாமி மண் இது. இங்கே வடக்கனுக்கு என்ன வேலை? விடியல் திராவிடனுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என்று வடக்கன் முடிவு செய்து விட்டார்களா ??....


அப்புசாமி
ஜூன் 27, 2024 07:35

இது மாதிரி அறிக்கை உடறதைத்தவிர்த்து?


Indhuindian
ஜூன் 27, 2024 06:52

நீங்க என்ன நியாயத்தை சொன்னாலும் நாங்க ஏத்துக்க மாட்டோம் நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை