உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஏப்ரல் 23, 1997மதுரையில், கைத்தறி தொழில் செய்யும் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் - இந்திரா தம்பதியின் மகளாக 1957, செப்டம்பர் 27ல் பிறந்தவர் லீலாவதி.இவர், குடும்ப வறுமையால் 10ம் வகுப்பை பாதியில் விட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டார். தன் 20வது வயதில், ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த குப்புசாமியை மணந்து, இவரும் அரசியல் பழகினார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியில் சேர்ந்து, மாதர் சங்க கை நெசவு தொழிலாளர் சம்மேளன மாநில துணை தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார்.கடந்த 1996ல், வில்லாபுரம் 59வது வார்டில் போட்டியிட்டு, மாநகராட்சி கவுன்சிலரானார். அப்பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்னையையும், லாரி தண்ணீர் விற்பனை முறைகேடுகளையும் களைய குழாய்வழி குடிநீர் வழங்கினார். கள்ளச்சாராய விற்பனையை தடுத்தார்.இதனால், பாதிக்கப்பட்ட ஆளுங்கட்சியான தி.மு.க.,வினர், இவரை மிரட்டினர். எதற்கும் அஞ்சாத இவரை, 1997ல் இதே நாளில், ஏழு பேர் கும்பல் வெட்டி படுகொலை செய்தது.நேர்மைக்காக, தன் 40வது வயதில் தன்னையே தியாகம் செய்த, 'வில்லாபுரம் வீராங்கனை'யின் நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ