| ADDED : மே 24, 2024 09:57 PM
மே 25, 1866திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் எனும் ஊரில், சிவசுப்பிரமணியம் பிள்ளை - வள்ளியம்மை தம்பதியின் மகனாக, 1866ல் இதே நாளில் பிறந்தவர் மு.சி.பூர்ணலிங்கம்பிள்ளை.இவர் திண்ணை பள்ளியில், துவக்க கல்வியை கற்றார். மேலப்பாளையம் பள்ளியில், சுந்தரம் ஆசிரியரிடம் திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களையும், இலக்கணத்தையும் கற்றதுடன், தருவை பள்ளியில் ஆங்கிலத்தையும், சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பட்டப்படிப்பையும் கற்றார். பல்வேறு கல்லுாரிகளில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார்.சென்னை பல்கலையில் தமிழ் பாடம் தேவை இல்லை என, ஆட்சி பேரவை முடிவு செய்த போது, தமிழறிஞர்களின் துணையுடன் தமிழ் மொழி பாடத்தை கொண்டு வந்தார். இவர் தமிழில் 18, ஆங்கிலத்தில் 32 நுால்களை எழுதினார். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தன் 81வது வயதில், 1947 ஜூன் 6ல் மறைந்தார். ஆங்கிலம் கற்று, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர் பிறந்த தினம் இன்று!