உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100% தவறாமல் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்! தவறில்லாத வாக்காளர் பட்டியல் தர மறந்தார்கள்!

100% தவறாமல் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்! தவறில்லாத வாக்காளர் பட்டியல் தர மறந்தார்கள்!

கோவை; கோவை லோக்சபா தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில், பலரது பெயர்கள் விடுபட்டு இருந்தன; வாக்காளர்கள் பலரும் தவிப்புக்கு உள்ளாகினர். நுாறு சதவீதம் ஓட்டுப்போட வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் ஆணையம், நுாறு சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் கோட்டை விட்டு முழிக்கிறது.கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடிக்கு சென்ற வாக்காளர்கள் பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த போதிலும், அவர்களது பெயர் பட்டியலில் இல்லாமல் இருந்தது. வாக்காளர் பட்டியல் தயாரித்தபோது, ஒருவருக்கே இரண்டு இடங்களில் ஓட்டுரிமை இருந்தால், அவரிடம் விளக்கம் கேட்டு, ஏதேனும் ஒரு இடத்தில் பெயர் நீக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் கூறியிருந்தனர்.அதன்படி, வாக்காளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்காமலேயே, பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதேபோல், முகவரி மாறிச் சென்றவர்களின் பெயர்களும், அவர்களது அனுமதி பெறாமல் நீக்கப்பட்டிருக்கின்றன. முகவரி மாறிச் சென்றவர்கள், இதற்கு முன் ஓட்டுப்பதிவு செய்த ஓட்டுச்சாவடிக்கு வந்து பட்டியலில் பெயர் இருக்கிறதா என தேடிப்பார்த்தனர். பெயர் நீக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத ஒரே காரணத்துக்காக, ஓட்டு செலுத்த முடியாத நெருக்கடிக்கு உள்ளாகினர். இது, வாக்காளர் பட்டியல் தயாரித்த, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் தவறு. அவர்கள் செய்த தவறுக்கு, நேற்றைய தினம் வாக்காளர்கள் ஓட்டுப்போட முடியாமல், அதிருப்தி அடைந்தனர். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தேர்தல் ஆணையம், பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கத் தவறி விட்டது. இம்முறை பயன்படுத்தும் வாக்காளர் பட்டியலில், தவறுகள் அதிகமாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இனியாவது, 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தேர்தல் ஆணையம் முனைப்பு காட்ட வேண்டும். இதற்கு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதை, கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கட்டாயப்படுத்தினால், ஒரு வாக்காளருக்கு ஒரு இடத்தில் மட்டுமே ஓட்டுரிமை இருக்கும். அது, எந்த ஓட்டுச்சாவடியில் இருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே, ஓட்டுப்பதிவு சதவீதம் இன்னும் அதிகரிக்கும். இல்லையெனில், ஒவ்வொரு தேர்தலுக்கும் குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

GMM
ஏப் 20, 2024 16:20

வாக்கு நூறு என்றால், அதை விட குறைந்த வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முன் எண்ண வேண்டும்


GMM
ஏப் 20, 2024 15:41

ஆதார், வங்கி கணக்கில் செல் போன் எண் இணைப்பு உள்ளது போல் செல், ஆதார் வாக்காளர் எண்அட்டையில் இணைக்க வேண்டும் தமிழக திராவிட கட்சிகள் தங்களுக்கு ஓட்டு போடுவார் என்று நம்பினால் எப்படியும் பட்டியலில் சேர்த்து விடும் கட்சி சாராத வாக்காளர் அனாதை போல் உதவி இல்லாமல் தவிப்பார்கள்? வாக்காளர் அட்டை உள்ளவர், பட்டியலில் பெயர் இல்லாதவர் தனியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் இந்த வாக்கு என்றால், வித்தியாசம் இருக்கும் போது எண்ண வேண்டும் நோட்டோ போன்ற செல்லாத ஓட்டுக்கு இது மேல் குடும்ப சூழ்நிலையில் வீடு மாறியதால், நான் சுமார் km மேல் பயணம் செய்து, வாக்கு செலுத்தி திரும்பினேன் இது அனைவருக்கும் சாத்தியம் ஆகாது தேர்தல் ஆணையம் மாற்று ஏற்பாடு பண்ண வேண்டும்


ஆரூர் ரங்
ஏப் 20, 2024 14:44

வாக்காளர் அட்டையில் என்னுடைய பிறந்த நாள் விவரங்களை திருத்த VOTER HELPLINE ஆப் மூலம் 5 முறை விண்ணப்பித்தும் பலனில்லை. நேரில் அலுவலரிடம் மனு அளித்தும் மாற்ற முடியவில்லை. இதுக்கு எதற்கு ஒரு ஆணையம்? விரைவில் நான் இறந்துவிட்டதாக என்னிடமே கூறுவர்?


A.Gomathinayagam
ஏப் 20, 2024 14:05

வாக்காளர்களுக்கு தேர்தலில் ஒட்டு போட மட்டும் உரிமை என்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்ற பார்க்க வேண்டிய கடமையும் இருக்கிறது புகார் குற்றம் சாட்டும் கட்சியினர் ஏன் தங்கள் பகுதி வாக்காளர்கள் பட்டியலை சரி பார்ப்பதில்லை கடைசி நேரத்தில் சங்கரா சிவா சங்கரா


ஆரூர் ரங்
ஏப் 20, 2024 14:40

தங்கள் பெயர் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும் என்று சட்டம் எதுவுமில்லை.. வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அறியாமல் ஒருவரின் வாக்குரிமையை பறிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சற்றும் அதிகாரமில்லை. இறந்திருந்தால் இறப்புச் சான்றிதழை ஆணையக் வைத்திருக்க வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கு சாட்சி வேண்டும். இஷ்டத்திற்கு நீக்குதல் தனிமனித உரிமைக்கு பங்கம்.


Krishnamurthy Venkatesan
ஏப் 20, 2024 17:00

பலர் வேறு இடங்களுக்கு/முகவரிக்கு/ஊருக்கு சென்றிருந்தாலும் ஒட்டு என வரும்போது தாங்கள் சொந்த இடத்திலேயே ஓட்டளிக்க விரும்புவார்கள் இப்போது அடுக்குமாடி கலாசாரம் நகரங்களில் பெருகிவிட்ட படியாலும், ஜனத்தொகை பெருகிவிட்டதாலும் வோட்டர் லிஸ்ட் சரி பார்க்க வருபவர்கள் எல்லா வீடுகளுக்கும் செல்லாமல் கீழ் தளத்தில் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு ஓன்று இரெண்டு பேர்கள் உதவியுடன் லிஸ்டை மாற்றுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை


ஆரூர் ரங்
ஏப் 20, 2024 13:52

ஆதார நிதி சம்பந்தமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எல்லா அரசு சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும் கட்டாயமாக்க சட்டத்தை தயார் செய்து விட்டு பொறுமைகாக்கவேண்டும்.


Jysenn
ஏப் 20, 2024 13:52

Oorukku upadesam seyyum diravida edupudi ? ? ? ?


R Kay
ஏப் 20, 2024 13:47

தேர்தல் கமிஷன் சுத்த வேஸ்ட்


Raju Katare
ஏப் 20, 2024 13:31

தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால் அதற்கான முயற்சியில் தேர்தல் கமிஷன் இயங்கவேண்டும் எது எதற்காகவோ ஆதார் எண்ணை இணைக்கும் அரசு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் இறங்கலாம் மேலும் சில நாடுகளில் உள்ளது போன்று வெவ்வேறு தொகுதிகளில் வசித்தாலும் அந்த தொகுதியிலோ அல்லது ஆன்லைன் மூலமாக வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கலாம் முயற்சியில் இறங்கி வந்த பிறகு தான் அதன் சாதகம் மற்றும் பாதகங்கள் தெரியவரும் இயந்திர வாக்குப்பதிவு நடைமுறை வந்த போதும் இத்தகைய முரண்பாடு ஏற்பட்டு பின் இப்போது நடைமுறையில் உள்ளது அல்லவா முயற்சியில் தேர்தல் ஆணையம் முழுமூச்சுடன் இறங்கினால் ௧௦௦ சதவீதம் அல்லது குறைந்தபட்சம் சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும்


GoK
ஏப் 20, 2024 13:03

தீமுகாவினர் போக்கிரிகள் அவர்களின் தரம் அவர்களின் தலைவர்கள் பேச்சுகளில் இருந்தே தெரியும் ராமசாமி நாயக்கர் அறுபது ஆண்டுகளுக்கு முன் எப்படி குல தாழ்ச்சி உயர்ச்சி குறித்து அருவருப்பான வார்த்தைகளை பேசினாரோ எப்படி அண்ணாதுரையும் கருணாநிதியும் சட்ட மன்றத்தில் ஏதோ ரெட்டைப்பொருள் பட பேசினால் அவர்களின் தமிழ் புலமை மக்களுக்கு தெரிய வரும் போல கருதி அவையினர் கூசிகுருகும் வண்ணம் பேசியதை யார் மறுப்பார்கள், மறப்பார்கள்மன்னிப்பார்கள் அவர்களின் சந்ததியினர் இன்றும் பேசுவது அரசியல் மற்றும் சமூக நாகரிகத்தை ஏளனம் செய்வது போலவே உள்ளது இவர்களுக்கு வெட்கம் மானம் எதுவும் இல்லைநாக்கிலும் நரம்பில்லை ஒரு நாட்டின் பிரதமரை இவர்கள் ஏசியது இப்போது தேர்தல் முடிவு வந்த பின்னர் "சொந்த ஆதாயங்களுக்காக" மீண்டும் போய் சூடு சொரணை இல்லாமல் பல்லை அளிப்பது சத்தியமாக தமிழன் குணமில்லை ஆனால் இவர்கள்தான் பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழனையே தள்ளி வைத்தவர்கள் ஆச்சே தமிழின் மீது சத்தியம் செய்து பின் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றவனை பூமாலை இட்டு வணங்கும் பகுத்தறிவு பாசறை பச்சோந்திகள் இவர்கள்தானே இவர்களை நம்பி அரை நூற்றாண்டை பாழாக்கி இழந்தோமே நம் சந்ததியார் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் "ல"வுக்கும், "ள"வுக்கும், "ழ"வுக்கும் வித்தியாசம் உணராத தலைமுறைகளை உருவாக்கிய நாம் அவமான பட வேண்டும் உதயநிதி பேசுகிறான் மக்கள் என்பதற்கு பதில் மக்கல் என்று அவன் வாயில் எந்த தர்ப்பை புல்லை இட்டுப் போசிக்கினால் தமிழைக்கொல்வதை நிறுத்துவான்? இவர்களின் எந்த வாக்கையும் சத்தியமாகக் கொள்ளக்கூடாது இவர்கள் ஒரு கொள்ளைக்கும்பல்


Swamimalai Siva
ஏப் 20, 2024 12:10

இத்தகைய குளறுபடிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் ஆதார் இணைவதால் மட்டுமே சாத்தியம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாத்தியம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ