உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் பட்டாசு ஆலை விபத்து: அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

தொடரும் பட்டாசு ஆலை விபத்து: அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

சென்னை: 'விருதுநகர் மாவட்டத்தில் தொடரும், பட்டாசு ஆலை விபத்துகளுக்கு, அரசின் அலட்சியமே காரணம்' என, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.அதன் விபரம்:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

சிவகாசி அருகே வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண நலமடைய வேண்டுகிறேன்.தி.மு.க., ஆட்சியில், விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் வெடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து நான் அடிக்கடி சுட்டிக்காட்டியும், இதுவரை பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத, தி.மு.க., அரசின் மெத்தன போக்கை கண்டிக்கிறேன். இனி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:

பட்டாசு ஆலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளாலும், பல முறை சுட்டிக்காட்டியும், அலட்சியம் காட்டும் அரசு நிர்வாகத்தாலும், பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இனியும் அலட்சியம் காட்டாமல், பட்டாசு ஆலைகளில், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:

இதற்கு மாநில அரசின் அலட்சியமே காரணம். விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி, தொழிற்சாலைகள் இயங்குவது, அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும், லஞ்சம் மற்றும் ஊழலினால் தான். உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து, தீர்வு காண தமிழக அரசு முனைய வேண்டும். இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு, கடும் தண்டனை பெற்று தர வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக அரசுக்கு உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 10, 2024 12:36

தொடரும் பட்டாசு ஆலை விபத்து தொடரும் நாய்க்கடி விபத்து அரசு மவுனம் ஏன்? அவர்களை எந்த நாயும் இதுவரை கடிக்கவில்லை அவர்கள் இதுவரையில் எந்தவித பட்டாசு ஆலை விபத்திலும் மாட்டவில்லை


veeramani
மே 10, 2024 09:29

செட்டிநாடு காரைக்குடியில் மைய்ய அரசில் விஞ்ஞானியாக உள்ளவரினர் கருத்து ரசாயனங்கள் எப்படி வெடிவிபத்தை உருவாக்குகின்றன, அவைகளை எவ்வாறு சேமிக்கவேண்டும், எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் அனைத்து செயல்களுக்கும் ப்ரோடோகால்கள் உள்ளன ராக்கெட் தேவையான வெடிமருந்து தொழில்சாலை கேரளா மாநிலத்தில் அலுவ வில் உள்ளது அங்கு இதற்கான முன் யெச்சரீக்கை செயல்கள் அருமையாக க்கொடுக்கப்பட்டுள்ளது சிவகாசியில் வெடிமருந்து கையாள்வது, எடுத்துச்செல்வது பற்றி எவருக்கும் தெரியாது சேமிப்பு கிடங்குகள் கட்டிய தோரனைகள் தவறு மாவட்ட கலெக்டர், ரெவெனுக்கே ஆ பிஸ்ர் , தீ தடுப்பு அதிகாரிகள் போன்றோர்கள் காரைக்குடியில் உள்ள மைய்ய மின்வேதியியல் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று சரியான வழிமுறைகளை பெறலாம் முதலில் சிவகாசி வெடிகள் செய்யும் தொழிற்ச்சாலைகள் அனுமதி ரத்துசெய்யுங்கள் பின்னர் அவர்களை உங்களின் செயல்பாட்டிற்கு எடுத்துவரலாம்


மேலும் செய்திகள்