உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதாரண இருக்கையா; பெண் எம்.பி., டென்ஷன்

சாதாரண இருக்கையா; பெண் எம்.பி., டென்ஷன்

சென்னை:ஏர் இந்தியா நிறுவனம் மீது, தென்சென்னை தொகுதி தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் புகார் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை:நேற்று முன்தினம் இரவு 9:20 மணிக்கு, டில்லியில் இருந்து சென்னை வர, ஏர் இந்தியா விமானத்தில் 'பிசினஸ் கிளாஸ்' இருக்கையை முன்பதிவு செய்திருந்தேன். விமானத்தில் ஏறிய போது, நான் முன்பதிவு செய்திருந்த இருக்கை எனக்கு கிடைக்கவில்லை. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சாதாரண இருக்கையை எனக்கு ஒதுக்கீடு செய்தனர். எம்.பி.,யான எனக்கே இந்த நிலை என்றால், மற்ற பயணியரிடம் இந்நிறுவனம் எப்படி நடந்து கொள்ளும் என்பதை நினைத்து பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.பயணியருக்கான உரிமைகள் மற்றும் சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் புறக்கணிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற செயல்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், 'உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு வருந்துகிறோம். இந்த புகார் குறித்து பேச விரும்புகிறோம்; அதற்கான நேரத்தை சொல்லுங்கள்' என்று பதில் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mohan das GANDHI
பிப் 19, 2025 14:51

திமுக பிராடு மேக்-அப் மேப் இவர் உண்மை பெயர் சுமதிதெலுங்கர் . தமிழச்சி என்று போஸ்டர் ஒட்டி ஊரை ஏமாற்றுகிறார் இந்த பிராடு ஸ்டுபிட் லேடி. இவரால் தமிழகத்திற்கு ஒரு ப்ரோயோசனமுமில்லை இவர் ஊழல்வாதியே


Dharmavaan
பிப் 18, 2025 14:57

இவள் மகா ராணியா எகானமி கிளாஸ் கூட அதிகம் ரயிலில் வர வேண்டும்


PalaniKuppuswamy
பிப் 18, 2025 07:38

சமோசா சாப்பிட செல்வதற்கு பிசினஸ் சொகுசு வகுப்பு கேட்குதா அவ்வளவு பெரிய அப்பா duckker வம்சமா? சொந்த பணத்தில் பொது சேவை செய்யுங்கள் ஊர் பணத்தை இப்படி அநியாயமாக செலவழித்தால் சாபம் வந்து சேரும்


SUBRAMANIAN P
பிப் 17, 2025 13:58

அதான், தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு, சாமானியனுக்கு வந்தா டொமட்டோ சாஸ். நல்ல பெண்மணி.. எதுக்கு போறீங்க நீங்க பாராளுமன்றத்துக்கு.. உளறிகொட்டவா..


D Natarajan
பிப் 16, 2025 20:48

ஓசி டிக்கெட். சொந்தக் காசில் வாங்கியது இல்லை


seshadri
பிப் 15, 2025 07:14

இங்கு ஒரு அன்பர் தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று பதிவிட்டிருக்கிறார். மெகா தவறான பதிவு. இ வர்கள்தான் எலெக்ஷனுக்கு முன்பே எல்லோருக்கும் பணம் கொடுத்துதானே ஒட்டு வாங்கியிருக்கிறார்கள். விலை கொடுத்து வாங்கப்பட்ட பின் இந்த மாதிரி பேசுவது மிகவும் தவறு. ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஒட்டு போட்டு இட்டு பின்னர் என்ன செய்தஆர் என்று கேள்வி கேட்கவும்.


நிக்கோல்தாம்சன்
பிப் 15, 2025 04:27

தமிழக பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டு வாழ்க்கையை நரகமாக்கி செல்லுவது தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தெரியவில்லை போலும் அவளுக்கு சீட் தான் பெரிது , இதுநாள் வரை இந்த துக்ககரமான ஆட்சியை கண்டித்து அறிக்கை கூட வெளியிட வில்லை இந்த பெண்மணி


Chand
பிப் 15, 2025 04:20

நீங்கள் சாதாரண இருக்கையில் அமர கூடாதா


எவர்கிங்
பிப் 15, 2025 02:34

எம்.பி என்பவர் மக்களோடு மக்களாக வாழப் பழகனும் பிசினெஸ் க்ளாசில்போற அளவு நீங்க ஒர்த்த இல்லை சுமதி


Bala
பிப் 15, 2025 01:55

ஏர் இந்தியா நிறுவனம் சாதாரண மக்களுக்குக்கூட upgrade செய்து அவ்வப்போது பிசினஸ் வகுப்பில் பிரயாணம் செய்யும் வாய்ப்பை பலமுறை தந்திருக்கிறார்கள். அப்பொழுது மக்கள் என்ன ஏர் இந்தியாவுக்கு நன்றியா ட்விட்டரில் சொல்கிறார்கள்? சிலசமயம் இதுபோன்று நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஏன் காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததில்லையா? தொகுதி மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினால், இந்தம்மா தன்னுடைய சின்ன அசௌகரியத்தை ஊதி பூதாகாரமாக்குறாங்க. இவங்க தொகுதி மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை